செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஆட்டோவில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்களாம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆட்டோ மீது மோதிய லாரி:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தீவனூர் பகுதியில் ஆட்டோ சென்றுக்கொண்டிருந்த போது திண்டிவனத்தில் திருவண்ணாமலைக்கு தார் ஏற்றிச்சென்ற லாரியின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது இதில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஆட்டோவில் பயனம் செய்த செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமரகுரு அவரது மனைவி மஞ்சுளா.

மகன் விஜயன் மற்றும் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த குருமூர்த்தி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரோசனை காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.