அரசு பள்ளியில் தேசிய கொடி கம்பத்தை உடைத்த மர்ம நபர்கள்...விழுப்புரத்தில் அதிர்ச்சி

கண்டமங்கலம் அருகே அரசு பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்படும் கம்பத்தினை மர்ம நபர்கள்  உடைத்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகேயுள்ள அரசு பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்படும் கம்பத்தினை மர்ம நபர்கள்  உடைத்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

அரசு பள்ளியில் தேசிய கொடி கம்பம் - உடைத்த மர்ம நபர்கள் 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த இரசமுத்திரபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்திய நாட்டின் சுதந்திர தின விழா வருகின்ற வியாழக்கிழமை கொண்டாடபட உள்ள நிலையில் அன்றைய தினம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளியில் சுதந்திர தின விழாவினை கொண்டாட உள்ளனர்.

இந்நிலையில் மர்ம நபர்கள் இரவு பள்ளியின் வாயிலில் இருந்த தேசிய கொடி ஏற்றப்படும் கம்பத்தினை உடைத்து எரிந்துள்ளனர். இன்று காலை தலைமை ஆசிரியர் சேகர்  பள்ளியில் சென்று பார்த்த பொழுது கொடிக்கம்பம் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கண்டங்கமங்கலம் காவல் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேசிய கொடி கம்பதினை உடைத்தவர்கள் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.

போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணி

நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில்  சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். சுதந்திரன தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), நரேந்திர நாயர் (வடக்கு) ஆகியோர் மேற்பார்வையில், 9,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் கூடுதலாக போலீஸார் பணியமர்த்தப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தபட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola