விழுப்புரம்: 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை துவக்கிவைத்து, 2620 பயனாளிகளுக்கு ரூ.18.49 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்டஉதவிகளை வழங்கினார் அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் கரும்பு திருமண மண்டபத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், 71-வது அனைத்திந்தியகூட்டுறவு வார விழாவினை துவக்கி வைத்து, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா.இலட்சுமணன், அன்னியூர் அ.சிவா, மணிக்கண்ணன், செஞ்சி மஸ்தான், சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் கூட்டுறவுத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திவருகிறார்கள். அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் கரும்பு திருமண மண்டபத்தில், 71-வதுஅனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், 1663 மகளிர்சுயஉதவிக்குழுவினை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.10,69,24,000/- மதிப்பீட்டில் மகளிர்சுயஉதவிக்குழு கடனுதவியும், 10 பயனாளிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பீட்டில் கலைஞர் கனவுஇல்லம் கட்டுதற்கான கடனுதவியும், 5 பயனாளிகளுக்கு ரூ.22,50,000/- மதிப்பீட்டில் சிறுபால்பண்ணை கடனுதவியும்,
6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,50,000/- மதிப்பிட்டில்கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு ரூ.21,76,640/- மதப்பீட்டில் டிராக்டருக்கான கடனுதவியும், 2பயனாளிகளுக்கு ரூ.2,00,000/- மதிப்பீட்டில் போர்வெல் அமைப்பதற்கான கடனுதவியும், 2பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பீட்டில் சிறுவணிகக் கடனுதவியும், 68 பயனாளிகளுக்குரூ.32,30,000/- மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவியும், 42 பயனாளிகளுக்கு ரூ.11,56,000/-மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 813 பயனாளிகளுக்கு ரூ.6,50,38,900/-மதிப்பீட்டில் பயிர் கடனுதவியும், 4 பயனாளிகளுக்கு ரூ.12,00,000/- மதிப்பீட்டில் தனிநபர் ஜாமீன்கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு ரூ.8,90,000/- மதிப்பீட்டில் வீட்டுக்கடனுதவியும், 1 பயானிக்குரூ.5,00,000/- மதிப்பீட்டில் வீட்டு பராமரிப்பு கடனுதவி என மொத்தம் 2620 பயனாளிகளுக்குரூ.18,49,65,540/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாய பெருமக்கள் நலனில் அக்கறைகொண்டு அதிகப்படியான விவசாயம் நடைபெறும் பகுதிகளுக்கு அருகிலேயே ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்துக்கொடுத்துவருகிறார்கள். இதன் மூலம், விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்த முடிகிறது. மேலும், விளைபொருட்களுக்கான உரிய விலையும் கிடைக்கப்பெற்று வருகிறார்கள். அந்த வகையில்,விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த துணை முதலமைச்சர் அவர்கள், விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு,விவசாயிகளிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் வாயிலாக தாங்கள் விளைவித்தபொருட்களுக்கு முறையாக பணம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாய பெருமக்கள் விவசாயப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், அனைத்து கூட்டுறவு சங்கங்கள்மூலம், பயிர் கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள். இதன் மூலம், விவசாயப்பணிகள் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல்,மகளிர் நலன் கருதியும், மகளிர்கள் சுயமாக தொழில் துவங்கிடும் வகையில், மகளிர்சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுதவிகளைஅதிக அளவில் வழங்கி வருகிறார்கள். இதன் மூலம், அதிகப்படியான மகளிர் சுய உதவிக்குழுஉறுப்பினர்கள் தொழில் துவங்கி தங்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 20918 நபர்களுக்கு ரூ.89.88 கோடிமதிப்பிலான 5 பவுன் நகைக்கடனுதவிகளை தள்ளுபடி செய்துள்ளார்கள். மேலும், 24129 மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.24.43 கோடி மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழுகடனுதவிகள் தள்ளுபடி செய்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறைகள் மூலமாக 923 முழுநேர நியாயவிலைக்கடைகளும், 240 பகுதிநேர நியாய விலைக் கடைகளும், 21 மகளிர்சுயஉதவிக்குழுவினரால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளும், 6 மகளிர் சில்லறை விற்பனைநிலையங்களும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கூட்டுறவுத்துறை மூலமாக, முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் விழுப்புரத்தில் ரூ.87.00 இலட்சம் மதிப்பீட்டில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இம்மருந்தகத்தில் 20சதவீதம் குறைந்த விலையில் மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குறைந்தவட்டியில் கடனுதவிகளை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். இதன் மூலம்,பொதுமக்கள் அதிக அளவிலான வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்படும் நிலை மாறியுள்ளது. தற்பொழுது கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தொழில் புரிவதற்கான கடனுதவிகளை பெருமளவில் பெற்று பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் சமநிலை பெற்று வாழ்க்கை நடத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்குவதற்கான கடனுதவிகள் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் மகளிர் சுயஉதவிக்குழுவினை உருவாக்கினார்கள். இந்த மகளிர் சுயஉதவிக்குழுவினரின் வாழ்வாதாரமேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த சமயத்தில், துணை முதல்வராக இருந்தபொழுது விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றஅரசு நிகழ்ச்சியில் நான்கு மணி நேரம் நின்றுகொண்டே மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் நலனில்அக்கறை கொண்டு விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர்உரிமைத்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன் போன்ற பல்வேறு சிறப்புத்திட்டங்களைதொடர்ந்து செயல்படுத்தி, மகளிர் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்கள். எனவே, மகளிர் சுயஉதவிக்குழுவினைச் சேர்ந்த மகளிர்கள் தாங்கள் பெற்றகடனுதவியினை கொண்டு நல்ல முறையில் தொழில் புரிந்திட வேண்டும்.
இதுமட்டுமல்லாமல்,கூட்டுறவு சங்கங்களில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக சேர்ந்திட வேண்டும்.அப்பொழுதுதான், கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவே, நாட்டுயர்வு என்றசொல்லுக்கேற்ப அனைத்து தரப்பு மக்களுக்கும் எல்லா விதமான கடனுதவிகள் பெற்றுவாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் கடனுதவிகள் வழங்குவதால்கடனுதவிகளை பெற்று தொழில் துவங்கி தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.