Just In





TVK Vijay: யாரை எதிர்த்து அரசியல்... சமிக்கை தந்த விஜய்... சுவாரசிய தகவல் என்ன தெரியுமா?
கட் அவுடில் அண்ணா படம் இடம் பெறாததை வைத்து பார்க்கும் பொது திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய போகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

விழுப்புரம்: தவெக மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
யாரை எதிர்த்து அரசியல்; டுவிஸ்டு வைக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.
அரசியல் எதிரி யார் ?
விஜயின் அரசியல் எதிரி யார் என்பதை இன்னும் அவர் முடிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறது. மாநாட்டு பேனரில் அண்ணாவின் படம் இல்லையென்பதற்காக அவர் திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளை எதிர்த்தே அரசியல் செய்வார். அப்படிதான் இங்கு செய்தாக வேண்டும். அவர்களைதான் அவர் மாநாட்டு மேடையில் விமர்சித்தாக வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்து வருகின்றார்கள். ஆனால், அவரது திட்டம், இலக்கு, அரசியல் எதிரி யார்? என்பதையெல்லாம் அவர்தான் சொல்ல வேண்டும். தொடக்கத்தில், மாநாட்டு பணிகளுக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்காத நிலை, கேள்வி மேல் கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டன. பின்னர் அனைத்தும் சுமூகமாக செல்லத் தொடங்கியது.
'மத்திய அரசுக்கு ரகசிய நோட்'
விஜயை அவரது செயல்பாடுகளை, நகர்வுகளை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மத்திய உளவுத்துறை, ஒன்றை கண்டறிந்து அதனை மத்திய அரசுக்கு ரகசியமாக நோட் போட்டு அனுப்பியிருக்கிறது. அது, திமுக தலைமை ஒருவரோடு, விஜய் நடத்திய ரகசிய சந்திப்பு என்கிறது உளவுத்துறை வட்டாரம். ஆச்சரியப்படத்தக்க வகையில் தான் மத்திய உளவுத்துறையின் இந்த நோட் இருக்கிறது. அரசியல் என்று வந்துவிட்டால் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். மத்திய உளவுத்துறையின் இந்த 'நோட்' பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையா ? இது உண்மைதானா? என்று கேட்டு சந்திப்பின் முழு விவரங்களை திரட்டச் சொல்லியிருக்கிறார்கள். இதெற்கெல்லாம் பதிலை மாநாட்டு மேடையிலேயே விஜய் உடைப்பார். களம் என்று வந்துவிட்டால் அவர் உடைத்துதான் ஆகவேண்டும்.