மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுற்றுலா தலம் ஒன்றில் நபர் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு, அவர் முன்பே அவரது மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி:
இந்தாண்டு, கொல்கத்தா சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மற்றுமொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ரேவா நகரில் கோயிலுக்கு அருகே சுற்றுலா தலம் ஒன்றில் தம்பதியினர் தாக்கப்பட்டிருக்கின்றனர்.
பின்னர், கணவனை மரத்தில் கட்டி வைத்து, மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அதை படம்பிடித்து, போலீசில் புகார் அளித்தால், அந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிடுவேன் என தம்பதியினரை மிரட்டியுள்ளனர்.
கணவன் முன்பு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்:
இந்த சம்பவம், கடந்த அக்டோபர் 21ஆம் நடந்தது. மறுநாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து சில சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்தனர். இதற்கிடையே, இந்தூரில் ஒரு நரம்பியல் பெண் மருத்துவரை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் நகரின் சதர் பஜார் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண் அரை நிர்வாணமாகவும், ரத்தப்போக்குடனும் அலைந்திருக்கிறார். இது, சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் அதிரடியாக செயல்பட்ட போலீசார், சிசிடிவியை ஆய்வு செய்ததில் சில மணிநேரங்களுக்கு முன்பு, அந்த பெண்ணிடம் ஒருவர் அச்சமூட்டும் வகையில் பேசியது தெரிய வந்தது. அந்த நபரின் பெயர் சோனு.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு, சோனு அந்த பெண்ணை கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்வது சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து, சோனிவை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். பின்னர், சோனு தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் கடந்தாண்டு அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார்.