உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் மிக விரைவாகவும் விறு விறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன, அது மட்டும் இன்றி பொதுமக்களும் கிறிஸ்துமஸ் கொண்டாத்திர்க்கு முழுமையாக தயராகி உள்ளனர், இந்த நிலையில் மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் உருவாக்கும் வகையில் சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் பாரம்பரியமாக நகை தொழில் செய்து வரும் முத்துக்குமரன் என்பவர் உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் வடிவத்தை 2 கிராம் 790 மில்லி எடைகொண்ட தங்கத்தில் செய்து அசத்தி உள்ளார். மேலும் இவர் கடந்த காலங்களில் இந்தியாவின் மிக முக்கியமான இடங்களான, தாஜ்மஹால் நாடாளுமன்றம், தொட்டில் குழந்தை திட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில், மக்கா மதினா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க இடங்களையும் உருவங்களையும் குறைவான தங்கத்தில் செய்து உள்ளார் குறிப்பிடத்தக்கது.

 



 

மேலும் இது குறித்து முத்துக்குமரன் கூறுகையில் நான் பாரம்பரியமாக நகைத் தொழில் செய்து வருகிறேன் ஆரம்ப நிலையில் குறைவான தங்க நகையில் உலகப்புகழ் பெற்ற அதிசயங்கள் செய்து உள்ளேன் உதாரணத்திற்கு சிதம்பரம் நடராஜர் கோவில் செங்கோட்டை ,தாஜ்மஹால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவம் இதுபோல் ஏராளமான இடங்களை குறைவான தங்கத்தில் செய்து உள்ளேன், இவ்வாறு பல உருவங்களையும் இடங்களையும் செய்து அதற்கு என பல விருதுகளையும் பெற்று உள்ளேன். மேலும் ஒவ்வொரு பொருளையும் செய்யும் போது ஒவ்வொரு மதத்தையும் சம்பந்தம் படுத்தும் வகையில் அமைத்து உள்ளேன் மேலும் நாளை கிறிஸ்மஸ் என்பதால் என்னுடைய நீண்ட நாள் கனவான உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி திருப்பேர ஆலயம் செய்ய வேண்டும் என நீண்ட நாள் ஆசை அதனை தற்போது செய்து உள்ளேன்.

 



 

இந்த வேளாங்கண்ணி கோவிலை செய்வதற்கு சுமார் 15 நாட்கள் எடுத்து கொண்டேன் மேலும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த கோவிலை செய்து உள்ளேன் இதேபோல் அனைவரும் மதங்களை விட்டுவிட்டு வேறுபாடு இன்றி ஒற்றுமையோடு செயல்பட்டால் இந்தியா ஒரு வல்லரசாக மாறும் மதங்களை விட்டுவிட்டு மனிதனாய் வாழ வேண்டும் மேலும் நாளை கிறிஸ்மஸ் விழா காணும் கிறிஸ்தவ மக்களுக்கு எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,