விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் உள்ளார். இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவிலான மழை கொட்டி தீர்த்தது. அது மட்டும் இன்றி சாத்தனூர் அணை மற்றும் வீடூர் பணிகளில் திறக்கப்பட்ட நீர் வீடுகளை சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பெரும்பாக்கத்தில் குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டு குடிநீர் வராமல் இரண்டு நாட்களுக்கு முன்பாக மயிலம் புதுச்சேரி சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுக்கு குடிநீருடன் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து சாலை மறியலை நிறைவு செய்தார்.
இந்த சாலை மறியலுக்கு வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் மற்றும் திமுக நிர்வாகி விஜயா ஆகியோர் தான் காரணம் எனக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்குமரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களை கொலை செய்து விடுவேன், ஜேசிபியால் வீட்டை இடித்து விடுவேன் எனவும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த ஆடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்பாக்கம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இது குறித்து வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் மயிலம் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் மீது புகார் மனு அளித்துள்ளார். வன்னியர் சங்க ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்த ஆடியோ தற்போது வைரளாகி வருகிறது. மேலும் அந்த ஆடியோவில் மயிலம் உதவி ஆய்வாளர் ஆய்வாளர் வெங்கடேசனும் ஊராட்சி மன்ற தலைவருடன் பேசியது குறிப்பிடத்தக்கது.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது.,
கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் எங்கள் கிராமத்தில் அத்தியாவசியமான தண்ணீர் 10 நாட்கள் ஆகியும் வரவில்லை, அதனை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த விதமான பயனில்லை, அதனால் ஊர் பொதுமக்கள் தண்ணீர் வேண்டி சாலையில் தண்ணீர் குடம் வைத்து போராட்டத்திற்கு வந்தபோது எங்கள் பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் என்பவர் என்னை தொலைபேசியில் அழைத்து பாமக கட்சிக்காரனா பெரிய இவனா என அசிங்கமாக தகாத வார்த்தைகள் பேசி கொலை செய்து விடுவேன் என கூறினார்.
சாலை மறியலுக்கு நீதான் காரணம் என்று சொல்லி என்னை திட்டினார், எனது பக்கத்தில் இருக்கும் திமுக கிளை செயலாளர் இளங்கோவன் அவரது அம்மா விஜயா அவர்கள் எனது கைபேசி வாங்கி தலைவரிடம் முத்துக்குமாரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜயா கூறிய பொழுது அவரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் திமுக நிர்வாகியான விஜயாவை தகாத வார்த்தையாளர்கள் திட்டி ஜேசிபி வைத்து வீட்டை நிரவி விடுவேன் எனவும் உங்களை யாரையும் உயிரோடு விடமாட்டேன் எனக்கூறி காவல் நிலையத்தில் நீங்கள் ஜாதி கலவரம் செய்கிறீர்கள் என உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வைப்பேன் எனவும் அதிகார பாணியில் கூறினார்.
எங்கள் பெரும்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் தலித் வீடுகளும், வன்னிய சமுதாயம் 30 வீடுகளும் உள்ளன. எங்களை அடிக்கடி தலைவர் என்ற பதவியில் எங்களை மிரட்டுவது போன்ற செயல்கள் ஈடுபட்டு வருகின்றார். எனவும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் குறிபிட்டுள்ளார்.