விழுப்புரம்: திண்டிவனம் அருகே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை துர்நாற்றம் வீசியதால் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அழகிய முட்டைகளை பள்ளம் தோண்டி புதைத்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவிலான கனமழை பெய்தது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 10 நாட்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் தொடங்கியது. மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளியில் புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வழங்கினர்.
அழுகிய வாடை வீசிய முட்டை
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தழுதாளி சுற்றியுள்ள மயிலம், பெரும்பாக்கம், திருவக்கரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு மதிய உணவு வழங்க சத்துணவு சமையலர் உணவு சமைத்துவிட்டு முட்டையை வேக வைத்துள்ளார். அப்பொழுது பள்ளிக்கு வந்து சில பெற்றோர்கள் உணவு சமையல் கூட்டத்தை சென்று பார்த்தபோது முட்டை அழுகிய வாடை வருவதாக சத்துணவு சமையலரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் அழகிய முட்டையை உடனடியாக இந்த இடத்தில் இருந்த அகற்ற வேண்டும் எனவும் வேறு புதிய முட்டையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்பரசன் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மாற்று முட்டை ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்த நிலையில் பெற்றோர்கள் சென்றனர். பின்னர் அழுகிய முட்டையை பள்ளம் தோண்டி புதைத்தனர். பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டையை வழங்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.