சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு 9000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்டது. ஒரே கடையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேளக்குடி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் பணி செய்யும் மேற்பார்வையாளர் பால்ராஜ் நேற்று இரவு 10 மணிக்கு எப்போதும் போல் டாஸ்மாக் கடையை பூட்டி சென்ற நிலையில் இன்று நன்பகல் 12:00 மணி அளவில் டாஸ்மாக் கடை திறக்க வந்தபோது கடையின் சுவர் துளையிட்டு மது பாட்டில்கள் திருடு போனது தெரியவந்தது. இதனை அடுத்து மேற்பார்வையாளர் பால்ராஜ் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் அளித்தார்.

 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன மது பாட்டில்களின் மதிப்பு ரூபாய் 9000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே டாஸ்மாக் கடையில் சுவரைத் துளையிட்டு மது பாட்டில்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை ஒரே டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 



கல்லூரியில் படிக்கும் போலீசாரின் மகளை கடத்திச் சென்ற காவலர்-காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரால பரபரப்பு.


கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்  காவலர் ஒருவர் பணிபரிந்து  வருகிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன் புதுநகர் போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் இவரது மகளான 19 வயதுடைய மாணவி, கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 


 நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை.


இதுபற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் மாணவியை, அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் கடலூர் வில்வநகரை சேர்ந்த வேல்முருகன் (32) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.


இதுகுறித்து பெண் போலீஸ், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகளை காவலர் வேல்முருகன் கடத்தி சென்று விட்டதாகவும், அவருக்கு உடந்தையாக அவரது தங்கை உள்ளிட்ட 3 பேர் இருந்ததாகவும் தெரிவித்தார். 


அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பெண் போலீசின் மகளை, போலீஸ்காரர் கடத்தி சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண