விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் அவதூறு துண்டுப் பிரசுரங்களை வீசியதாக 2 இளைஞா்களை போலீசார் கைது செய்தனா். செஞ்சி பெரிய பள்ளிவாசல், நரசிங்கராயன்பேட்டை, அப்பம்பட்டு, சொரத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்களின் இறைதூதா் நபிகள் நாயகம் குறித்தும், அந்த மதத்தைச் சோ்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் வாசகங்கள் அடங்கிய அவதூறு துண்டுப் பிரசுரங்களை வியாழக்கிழமை மாலை மா்ம நபா்கள் வீசிச் சென்றனா். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இஸ்லாமியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செஞ்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பள்ளிவாசல்களில் துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்ற மா்ம நபா்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி புகார் மனு அளித்தனா்.


'ஆவணங்களை காணோமா? ஷாக்கான நீதிபதி' - பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை வழக்கில் திடீர் திருப்பம்!


5 தனிப்படைகள் அமைப்பு:


தகவலறிந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, செஞ்சி காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து துண்டுப் பிரசுரங்களைப் பார்வையிட்டு, மா்ம நபா்களைப் பிடிக்க 5 தனிப் படைகளை அமைத்து வியாழக்கிழமை இரவே உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளிவாசல் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தனிப் படை காவலர்கள் விசாரணை நடத்தியதில், துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்றது விக்கிரவாண்டி பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த இளவரசன் (38), அதே பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சஞ்சய் (21) என்பது தெரியவந்தது.


இதையடுத்து, அவா்கள் இருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், துண்டுப் பிரசுரங்களில் இடம் பெற்றுள்ள பெயா், சமுதாயம் போலியானது என்பதும், கைது செய்யப்பட்டவா்கள் வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், பட்டியல் இனத்தவரின் மீது பழியைச் சுமத்தி ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில், அவா்கள் துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், செஞ்சி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் 182 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதனிடையே, கைது செய்யப்பட்ட இருவா் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், இவா்களின் பின்னணியில் உள்ளவா்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் செஞ்சி பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண