விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 21 சமூக நீதி போராளிகளுக்கான நினைவு மண்டபம் மற்றும் திராவிட இயக்க முன்னோடி கோவிந்தசாமி மணிமண்டபம் ஆகியவற்றை வருகிற 28ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி:


தமிழக முதல்வர் 28ஆம் தேதி உன் நினைவு மண்டபங்களை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மறைந்த அமைச்சர் கோவிந்தசாமி அவர்களின் மணிமண்டபத்தையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 50,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து தொகுதிக்கான நலத்திட்டங்களை அறிவிக்க உள்ளார்.


நேற்று தமிழக முதல்வரின் வெற்றிக்கு இராண்டு சாட்சிகள் நடந்துள்ளது. தமிழகத்தின் தொல் வரலாறு 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்காலம் இருந்ததற்கான ஆய்வு பூர்வமாக வெளியிட்டுள்ளார். தமிழக வரலாறு புறக்கணிக்கப்பட்ட காலம் உண்டு. எகிப்தில் நடைபெற்றதுபோல இந்தியாவில் அகழ்வாய்வு நடைபெற்றால் இந்தியாவின் வரலாறு தென்பகுதியில் இருந்து தான் துவங்கும் என்று அக்காலத்திலேயே வரலாற்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.


அதைத்தான் தமிழக முதல்வர் நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் இது போன்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை நடத்துவதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பில் ஒப்படைப்பட்டது. தமிழகம் முழுவதும் அகழ்வாரங்கள் நடைபெற்று இன்று தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பாக இரும்பு கலாச்சாரம் இருப்பதை நிரூபித்துள்ளனர்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைத்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு என்பது மாற்து கருத்து இருக்க முடியாது.


இந்திய அரசு நேற்று டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது. முதல்வர் சட்டமன்றத்தில் எந்த முதல்வரும் பேசிறாத வகையில் டங்ஸ்டன் பேசினார். ஒன்றிய அரசு அனுமதித்தால் பதிவியை விட்டு விலகுவேன் என சொன்ன முதல்வர் உலகத்திலேயே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான்.


முதல்வர் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் காரணமாகவும் மேலும் மதுரை மக்களின் போராட்டம் காரணமாகவும், மக்களுக்கு ஆதரவாக அமைச்சர் மூர்த்தியும் துணையாக இருந்தார். மக்களின் கோரிக்கையும் ஏற்று சட்டமன்றத்திலேயே நிறைவேற்றிய தீர்மானத்திற்கும் விளைவாக இன்று ஒன்றிய அரசு மக்களின் குரலுக்கும், தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து நேற்று டங்ஸ்டன் சுரங்கத்தை நிரந்தரமாக விளக்கியுள்ளனர். உண்மையில் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி. நேற்று தான் தமிழர்களின் வெற்றி தினம் என்று நாம் கொண்டாடலாம் என்றார்.