கடலூர் மாவட்டம் கடலூர் அருகே உள்ள கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்ஷிதா (29). திருநங்கையான இவர் கடலூரில் வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு படித்துள்ளர். பின்னர் வேதியியல் பாடத்தில் முனைவர் பட்டம் படிப்பதற்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து உள்ளார்.

 

ஆனால் இவருக்கு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்க பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும், திருநங்கை என்பதால் அனுமதி மறுத்ததாகவும், ஆணாக இருந்திருந்தால் கல்லூரி படிப்பையே நீ முடித்திருக்கலாம் என கூறியதாக திருநங்கை ரக்ஷிதா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

கடந்தாண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டதாகவும் திருநங்கை ரக்ஷிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு என்பவருடன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

 

திருநங்கை என்பதால் வழிகாட்டு ஆசிரியர்கள் கிடைக்க வில்லை என கூறும் பேராசிரியர்கள், நாங்கள் சமுதாயத்தில் முன்னேற கல்வி மட்டுமே வழி என பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தால் திருநங்கை என்கின்ற காரணத்தினால் இரண்டு ஆண்டுகளாக நிராகரிக்கப்படுவது எங்களை கல்வியிலும் புறக்கணிப்பது வேதனையாக உள்ளது.

 

 கடலூரில் தனியார் கலைக் கல்லூரியிலும், ஆசிரியர் கல்வி நிறுவனத்திலும் ஆணாக இருந்தபோது படித்ததாகவும், தற்போது முனைவர் பட்டம் பெற விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளாக கல்வி பயில முடியாமல் இருப்பதாகவும் தற்போது கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள இசைப் பள்ளியில் நடன பயிற்சி பெற்று வருவதாகவும் ரக்ஷிதா தெரிவித்துள்ளார்.

 

 திருநங்கைகளுக்காக நல வாரியம் அமைத்த தமிழக முதல்வர் நான் கல்வி பயில ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

 

 நாங்கள் பெற்றோர்களாலும், சமுதாயத்திலும் வேலைவாய்ப்பிலும் தொடர்ந்து இது போன்ற புறக்கணிப்புகள் நடைபெறுவதால் யாசகம் எடுத்துத்தான் ஆக வேண்டும் இந்த நிலை மாற கல்வியை கொடுங்கள் என ரக்ஷிதா திருநங்கைகளின் குரலாகவே தொடர்ந்து ஒலிக்கிறார்.