விழுப்புரம்: மரக்காணம் விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் : மரக்காணம் காவல் நிலையம் மற்றும்  எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை


விஷ சாராயம் குடித்து உயிரிழப்பு 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் உயிரிழந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் 45 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷ சாராயம் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் அமரன்(27). ஆறுமுகம்(44). முத்து(33). பர்கத்துல்லா(51). ஏழுமலை(50). இளையநம்பி(45). குணசீலன்(42). மண்ணாங்கட்டு(57). ரவி(54). பிரபு. ராபர்ல் உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறையாக உள்ள மதன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கொலை வழக்கு :-


கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்த்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கு தொடர்பான ஆவனங்களை கோட்டகுப்பம் காவல் துணை கண்கானிப்பாளர் சுனில்  விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியிடன் ஒப்படைத்தார். வழக்கு விசாரனையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்  இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள மதன் உள்ளிட்ட 12 பேர்  கொலை வழக்காக பதிவு செய்தனர்.


சிபிசிஐடி அதிகாரிகள் ஐந்து குழு


இவ்வழக்கு தொடர்பாக  சிபிசிஐடி அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து எக்கியார் குப்பம் கிராமம். மருத்துவனனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் புதுச்சேரியில் எத்தனால் விற்பனை செய்த கெமிக்கல் ஆலை உள்ளிட்ட இடங்களில் விசாரனை செய்யவுள்ளனர்.  கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக மரக்காணம் காவல் நிலையம் மற்றும்  எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் சிபிசிஐடி  எ.டி.எஸ்.பி கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.