Villupuram School Holiday : திருவண்ணாமலை மகா தீபம்: விழுப்புரத்தில் சில பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு...!

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல்பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இதையடுத்து, நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை தீபம்:

கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதனையொட்டி தினமும் காலை, இரவு நேரங்களில் கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைபெற்று வருகிறது.  அதன்படி நாளை (டிசம்பர்.06) மாலை மகா தீபம் ஏற்றும் முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம்‌, அண்ணாமலையார்‌ தீபம்‌ (மகா தீபம்‌) விஷ்ணு தீபம்‌ உள்ளிட்ட ஐந்து தீபங்கள் ஏற்றப்படும். டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில்‌ பரணி தீபம்‌ அண்ணாமலையார்‌ கருவறையில்‌ ஏற்றப்பட்டு, பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ ஐந்து தீபங்களாக அவை காண்பிக்கப்படும்.

திருவண்ணாமலை மகாதீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6ஆம் தேதி ஏற்றப்படவுள்ள மகாதீபத் திருவிழாவில் பங்கு பெற்று மலையேற நினைக்கும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 06.12.2022 அன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

நிபந்தனையானாது, 

  • முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டும்தான் மலை ஏற அனுமதி அளிக்கப்படும். 
  • காலை 6 மணி முதல்  மதியம் 2 மணி வரை வரும் முதல் 2,500 பக்தர்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும்.
  • திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 06.12.2022 அன்று காலை 06.00 மணி முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அருள்மிகு முதல் முதலில் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும்.
  • மலை மீது ஏறும் பக்தர்கள் கையில் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 
  • அந்த தண்ணீர் பாட்டிலை மலையில் இருந்து இறங்கும்போது அதனை உடன் கொண்டு வரவேண்டும். 
  • மலைமீது ஏறும் பக்தர்கள் பட்டாசு, கற்பூரம், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீ பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. 
  • 06.12.2022 அன்று காலை 06.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.
  • இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக (Queue System) அனுமதி சீட்டு மேற்குறிப்பிட்ட சிறப்பு மையத்தில் வழங்கப்படும். மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

  • மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.
  • பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பக்தர்களுக்கான நிபந்தனைகள் என குறிப்பிட்டு உத்தரவு  வெளியிட்டுள்ளார். 

 

Continues below advertisement