சாராயம் விற்பவர்கள் எல்லாம் கல்வியாளராக மாறிவரும் சூழல் உள்ளதாக  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளையில் சார்பில் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்ணாமலை பல்கலைக துணைவேந்தர் முனைவர் கதிரேசன் முன்னிலையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் எம் பி டாக்டர் அன்புமணி ராமதாஸ்,சரஸ்வதி கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ஸ்ரீ காந்தி பரசுராமன் மற்றும் அறங்காவலர் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ”இந்த கல்லூரியை எனது தாயாரின் முழு கண்காணிப்பில்  கடின உழைப்பால் நிறுவப்பட்டது. இது கல்லூரி அல்ல கல்வி கோயில் திண்டிவனத்திற்கு இது ஒரு கல்வி கோயில் மேல்மருவத்தூருக்கு ஆன்மீக கோவில் உள்ளது. அதேபோல நமது திண்டிவனத்தில் கல்விக் கோயில் உள்ளது. கல்வி கோயிலில் மாணவர்கள் பயின்று பல வெற்றியாளராக வரவேண்டும். சாராயம் விற்பவர்கள் எல்லாம் கல்வியாளராக மாறிவரும் சூழல் உள்ளது. ஆகையால் கல்வியில் கடைசி மாவட்டமாக நமது விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இந்த கல்வி கோயிலில் பயின்று மாணவர்கள் பல்வேறு சாதனை படைக்க வேண்டும்” எனப்  பேசினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண