விழுப்புரம் : விழுப்புரத்தின் நகர பகுதிகளில் உள்ள தார்சாலைகள் குண்டும், குழியுமாகவும், சேறும் , சகதியுமாக மாறியுள்ளதால் மோசமான சாலைகளை கடக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் வயதானவர்கள்  பாதிப்படைந்துள்ளனர். 


விழுப்புரம் நகரின் பல பகுதிகளில் சில தினங்களாக இரவு நேரத்தில் பெய்த மழையினால் தார்சாலைகள் முழுவதும்  குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் இருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் பல இடங்களில் முடிவடைந்து, சில இடங்களில் முடியவடையாமலும் உள்ளன. அவ்வாறு பணிகள் முடிவடைந்த நிலையிலும் சாலைகள் அமைக்காமலும் சேதமடைந்த சாலைகளை கூட சீரமைக்காமல் உள்ளதால் குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமலும் முதியவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


Vinayagar Chaturthi 2023 : 600 கிலோ நவ தானியங்களால் உருவாக்கப்பட்ட 12 அடி விநாயகர் சிலை..


குறிப்பாக சாலாமேடு, சிங்கப்பூர் நகர், ஸ்ரீராம் நகர், சுமையா நகர், என்.ஜி.ஓ காலனி, சுதாகர் நகர்  உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் மிக மோசமாக உள்ளதால் அரசு மகளிர் கல்லூரி , அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள், வாகன ஓட்டிகள்  மட்டுமின்றி அப்பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த மக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளுக்கு செல்லும்  கட்டிட பணிகளுக்காக ஜல்லி, மணல், செங்கல் ஆகியவைகளை ஏற்றி செல்லும் லாரிகள்,  சரக்கு வாகனங்கள், கார்கள், என அனைத்து வாகனங்களும் பள்ளம் மற்றும் சேற்றில் சிக்கிக்கொள்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Villupuram : கிடப்பில் போடப்பட்ட பிரதான சாலையின் பாலம் பணி... வழியின்றி தவிக்கும் கிராம மக்கள்...கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்


அதே போன்று தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரை கூட அகற்றப்படாததால் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில்  வசித்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகமோ, பொது பணி துறையோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.