கொரோனா இரண்டாம் அலை பரவலின் போது பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அரசு சார்ந்த நிகழ்ச்சிகளும் குறைவான நபர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறை கேட்பு கூட்டம் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவும் காரணமாக குறை தீர்ப்பு கூட்டத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புகார் பேட்டி வைக்கப்பட்டு மக்களால் அதில் புகார் மனுக்கள் போடப்பட்டு வந்தன.



 

இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் இன்று கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து துறை அதிகாரிகளின் முன்னிலையில் மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மக்கள் மனு கொடுக்க வந்தனர், அவர்கள் அனைவரின் மனுக்களும் முதலில் அலுவலகத்தில் பதியப்பட்டு அவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டது அந்த டோக்கன் வரிசையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும் அறைக்கு வெளியே மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக காதுக்கொண்டிருந்தனர்.

 

மக்கள் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து வருவதால் காலையில் இருந்தே அங்கு காத்துக்கொண்டு இருந்தனர். பின் ஒரு கட்டத்தில் ஆட்சியர் வர நேரமானதால் நின்றுகொண்டிருந்த அவர்களுக்கு என நாற்காலிகள் ஏதும் வழங்கப்படாததால் மக்கள் ஆட்சியர் அலுவலக வராண்டாவிலேயே அமர்ந்து விட்டனர், பின் ஆட்சியர் எப்பொழுது வருவார் என மக்கள் அமர்ந்து இருந்தனர், பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆட்சியர் வந்தவுடன் மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. 

 


 

மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர் அதனை பரிசீலித்து பார்த்து, அப்பொழுதே மனுவிற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அந்த இடத்திலேயே அவர்களுக்கான பதில் அளிக்கப்பட்டு மனு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், அனைத்து விதமான அரசு துறைகளில் இருந்தும் முக்கிய அதிகாரிகள் வந்திருந்தனர்.