விழுப்புரம்: தமிழ் மொழி தான் கலாச்சாரத்தின் முற்பட்ட மொழி என ஆளுநர் உணர்ந்துள்ளதையும் தமிழ் மொழியின் மீது இந்தி மட்டுமல்லாமல் எந்த மொழியும் திணிக்கப்படாது என கூறியுள்ளது. நம் கொள்ளைக்கு கிடைத்த வெற்றி எனவும் ஆளுநரின் கருத்தை வரவேற்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சட்ட மேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சமத்துவ நாள் உறுதி மொழியை கூற திமுக தொண்டர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.


செய்தியாளர் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது...


அம்பேத்கர் பிறந்தநளை சமத்துவ நாளாக அறிவித்து சட்டமன்றத்தில் சட்டமாக்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும்  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் சமூகநீதி பரப்பப்படவேண்டும் என்பதற்காக இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளை ஒருங்கினைத்து சமூக நீதி மாநாட்டினை ஸ்டாலின் நடத்தியதாகவும் அம்பேத்கருக்கு விழா எடுப்பது கொள்கை ரீதியான ஒன்று என கூறினார். ஆண், பெண் சாதிய வேறுபாடுகள் மறந்து ஒன்றாக வாழ வேண்டும் என அம்பேத்கர் பாடுபட்டார் அதனை இளைஞர்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் வரலாற்றை மறந்துவிடக்கூடாது என்றும் ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்பது எலோருக்கும் தெரியும், பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள் என்றால் அது நாடாகம் எனவும் கொள்ளை பிடிப்பு இருந்தால் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அவர்கள் பின்பற்ற வேண்டும் பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்தது தவறு என்பதை அவர்கள் உனர வேண்டுமென கூறினார்.


இன்று மாநில அளுநர் ரவி மக்களின் உணர்களையும், அரசின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு தமிழ்மொழி தான் மிகவும் பழமைவாய்ந்த மொழி என்றும் அதில் இந்தியை மட்டுமல்ல எந்த மொழியினையும் திணிக்க முடியாது  பேசியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றும் ஆளுநர் இதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். இப்போது தான் தமிழ் மொழியின் வரலாற்றை ஆளுநர் இப்போது தான்  தெரிந்துக்கொண்டு வருவதாகவும் தமிழ் மொழிதான் கலாச்சாரத்தின் முற்பட்ட மொழி என ஆளுநர்  உணர்ந்துள்ளதையும் தமிழ் மொழியின் மீது இந்தி தினிக்கப்படாது என கூறியுள்ளது நம் கொள்ளைக்கு கிடைத்த வெற்றி, ஆளுநரின் கருத்தை வரவேற்பதாக பொன்முடி தெரிவித்துள்ளார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண