விழுப்புரம்: திமுக முன்னனி தலைவர்கள் அமைச்சர்கள் சொத்து பட்டியல் வெளியிடுவது இது ஒன்னும் புதியதல்ல என்றும் திமுக என்றால் கொள்ளை அடிப்பது அரசாங்க சொத்தை அபகரிப்பது சொத்து சேர்ப்பதுதான் அவர்களின் கொள்கை என சிவி சண்முகம் சாடியுள்ளார். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் வெய்யல் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க நீர் மோர் பந்தல் மற்றும் புதிய அதிமுக கொடி கம்பத்தினை கொடியேற்றி திறந்து வைத்தார்.


கடந்த மாதம் தென்காசியில் நடந்த கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும். அப்படி வெளியிடும்போது மக்கள் இன்னும் சந்தோஷத்தில் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுவார்கள் என தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 10 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டார். 


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் இன்று வெளியிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவி சண்முகம், திமுக முன்னனி தலைவர்கள் அமைச்சர்கள் சொத்து பட்டியல் வெளியிடுவது இது ஒன்னும் புதியதல்ல என்றும் இது எல்லாருக்கும் தெரிந்த ரகசியமென்றும் திமுக என்றால் கொள்ளை அடிப்பது அரசாங்க சொத்தை அபகரிப்பது சொத்து சேர்ப்பதுதான் அவர்களின் கொள்கைகொள்கை என சாடினார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண