கள்ளக்குறிச்சி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் துர்க்கை அம்மன் சிலை உடைப்பு, 18 கைகள் உள்ள துர்க்கை அம்மன் சிலை கைகளை உடைத்துவிட்டு வேறு சமுதாயத்தின் பெயரில் சுவற்றில் எழுதி விட்டு சென்ற மர்ம நபர்கள் போலீஸ் தேடி வருகின்றனர்.


கள்ளக்குறிச்சியில் துர்க்கை அம்மன் சிலை உடைப்பு


கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஒரு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலாகும். இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கோவிலில் கடந்த 2022 ஆண்டு கோவில் குடமுழுக்கு விழா பொதுமக்கள் மற்றும் அறநிலத்துறை நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இதில் இந்நிலையில் இன்று  மாலை சுமார் ஒரு 6 மணி அளவில் கோவில் குருக்கள் கோவிலில் படைப்பதற்காக வந்துள்ளார்கள்.


18 கைகள் உள்ள துர்க்கை அம்மன் சிலை உடைப்பு:


அப்பொழுது கோவிலில் உள்ள சிலைகள் உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் குருக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் கோயிலுக்கு சென்று பார்த்தபோது அந்த கோவிலில் உள்ள 18 கைகள் உள்ள துர்க்கை அம்மன் சிலை முகத்தை சேதப்படுத்தி கைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.


ரத்தத்தில் சிலுவையை வரைந்த மர்மநபர்


மேலும் அருகில் இருந்த 8 கைகள் உள்ள துர்க்கை அம்மன் கல் சிலைகளை உடைத்து கைகள் எல்லாத்தையும் உடைத்து விட்டு ரத்தத்தில் சிலுவையை வரைந்து பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சென்று உள்ளார்கள். 


கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு பாதுகாப்பு அளித்து தடவியல் நிபுணர் ராஜவேல் தடயங்களை சேகரித்தார் இதையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.