தமிழகம் நமது பாரதத்தின் பழமையான கலாச்சாரம் பாரம்பரியம் நிறைந்த பகுதி மட்டுமல்லாமல் இங்கு சேவை மனப்பாண்மையுடன் நிறைய பேர் அமைதியாக மக்கள் தொண்டு செய்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள கொணமங்கலம் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுடைய மாணவர்களுக்கு தனியார் (சிருஷ்டி பவுண்டேசன்) சார்பில் இயற்கை முறையில் கட்டப்பட்ட 5 வீடுகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ”தமிழகத்தில் நிறையபேர் அமைதியான முறையில் சமுதாயத்திற்காக பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் கொனமங்கலத்திலுள்ள தனியார் அறக்கட்டளைகள் சார்பில் ஆர்டீசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நல திட்ட பணிகளை மேற்கொண்டு வருவதை பார்க்க வேண்டுமென கூறினேன். அவர்கள் எனக்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் சமுதாயத்திற்காக அவர்கள் செய்யும் மகத்தான பணியினை பார்ப்பதற்காக  நானே என்னுடைய விருப்பத்தின் பேரில் வருகை புரிய விரும்புவதாக தனியார் அறக்கட்டளை நிர்வாகத்திடம் தெரிவித்தேன். இது கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளதால் தங்கள் வருகைக்கு இந்த பகுதி சவுகரியமாக இருக்காது என தெரிவித்தார்கள். அதற்கு நான், கிராமப்புற விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆகையால் என எந்த பிரச்சனையும் இல்லை தெரிவித்தேன்” என்றார்.


மேலும், “மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு செய்வது என்பது மகத்தான பணி  யூனிடெட் ஸ்டேட்டில் ஆர்டீசம் குறைபாடுகளால் 2 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த பாதிப்பு இந்தியாவில் குறைவாக காணப்படுகிறது.  இருந்தாலும் அரசு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டாலும் இதற்கு என்று தனியாக கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. இது போன்றவர்களுக்கு சமுதாய பணியில் இது போன்றவர்களின் சேவை மனப்பாண்மை பங்கு என்பது என்பது மகத்தானது. தமிழகத்தில் நமது பாரதத்தின் பழமையான கலாச்சாரம் பாரம்பரியம் நிறைந்த பகுதி மட்டுமல்லாமல் இங்கு சேவை மனப்பாண்மையுடன் நிறைய பேர் அமைதியாக மக்கள் தொண்டு செய்து வருகின்றனர்” என்று கூறினார்.