விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மகிபால். இவருடன் அதே போலீஸ் நிலையத்தில்  உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஒருவர் குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகிபால் புகார் கூறியுள்ளார். ஆனால் சில தினங்களிலேயே புகார் தெரிவித்த உதவி காவல் ஆய்வாளர் மகிபால் விக்கிரவாண்டியில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அவர் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.


தான், எந்த குற்றமும் செய்யாத நிலையில் தன்னை ஏன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தீர்கள் என நியாயம் கேட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க அவர் பலமுறை முயற்சி செய்தார். ஆனால் அவர், காவல் கண்காணிப்பாளரை சந்திக்க விடாமல் அங்கிருந்த போலீசார் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் உதவி காவல் ஆய்வாளர் மகிபால், ஓய்வு பெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து ஆயுதப்படையில் பணி செய்ய வைத்திருந்ததால் மனமுடைந்த அவர், தன்னால் இனி உயிர் வாழ முடியாது என்றும், நான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும், அதற்காக இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தனது செல்போனில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக போலீசார் சிலருக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பி வைத்துவிட்டு நேற்று பிற்பகலில் இருந்து திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சிக்கு உள்ளான போலீசார், உதவி காவல் ஆய்வாளர் மகிபாலை பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர். தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு நாள் விடுமுறை கேட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு குறுந்தகவல் அனுப்பி வைத்து விட்டு உதவி காவல் ஆய்வாளர் மாயமான சம்பவம் விழுப்புரம் மாவட்ட போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.