விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் உறுதியளித்ததாக துரை.ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார். விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கழிப்பறை வசதி, தங்கும் அறைகளில் தொலைக்காட்சிப் பெட்டி, நடைமேடையில் ரயில் பெட்டிகளின் இடம் குறித்த அறிவிப்புப் பலகை, நகரும் படிக்கட்டுகள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதாக ரயில்வே பொது மேலாளா் உறுதியளித்தார். மேலும், புதுச்சேரியிலிருந்து சென்னை எழும்பூா் செல்லும் மெமு ரயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்படுவதாகவும், திருச்சியிலிருந்து, விருத்தாசலம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை விரிவுபடுத்தி, விழுப்புரம் வரை இயக்க பரிசீலிக்கப்படும் என அலுவலா்கள் உறுதி அளித்தனா்.


அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் திண்டிவனம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் ரயில் நிலையங்களை இணைத்து அடிப்படை வசதிகள் செய்வதும், தேஜஸ் அதிவிரைவு ரயில் விழுப்புரத்தில் நின்று செல்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி, பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா் என்றார் எம்.பி துரை.ரவிக்குமார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.