விழுப்புரம் : செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது போக போக தெரியும் என பாடல் பாடி பதிலளித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி அரசியலுக்காக எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசுவார் என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூரில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இரண்டு அங்கன் வாடி மையத்தினை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு., பதிலளித்த அவர் இது அதிமுகவின் கட்சி விவகாரம் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எல்லாம் போக, போக தெரியும் என பாடல் பாடி மருத்துவர் ராமதாசை போல பதிலளித்தார். அம்மா மினி கிளினிக் ஒரு வருடம் மட்டுமே செயல்பட வேண்டும் என ஒன்றிய அரசு விதி உள்ளது. 2020 ஆம் ஆண்டு அம்மா உணவகங்கள் மூட தொடங்கி விட்டனர். அம்மா பெயரில் உள்ளதா அதை மூட வேண்டும் என்கிற தேவை எங்களுக்கு கிடையாது.

Continues below advertisement

கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு!

எடப்பாடி பழனிச்சாமி அரசியலுக்காக எது வேண்டுமானாலும் பேசுவார் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட ஆம்புலன்ஸ் வந்துள்ளது ஆம்புலன்ஸ் வழிவிட்டு தான் முதல்வரும் சென்றுள்ளார் இது மரபு என கூறினார். அதிமுக, பாஜக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததற்கு பதிலளித்த பொன்முடி கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு கனவுகள் பலிக்குமா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் நிறைவேற்றுவார்கள் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என தெரிவித்தார்.