கள்ளகுறிச்சி: அதிமுகவிற்கு ஒரு போதும் ஆம்புலன்சில் அழைத்து செல்லும் நிலை ஏற்படாது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆம்புலன்சில் அழைத்து செல்லும் நிலை ஏற்படும். திமுக அமைச்சர்கள் அமலாக்க துறை வருமான வரித்துறை ரெய்டு வரும் என்ற அச்சத்தில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டி கீரனூரில் 126 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியினை அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு 5371 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 139 சட்டமன்ற தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து எழுச்சி பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அனைத்து இடங்களிலும் எழுச்சியை பார்க்க முடிவதாகவும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு ஊசி மருந்துகள் கிடையாது
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு இரு பெரும் தலைவர்கள் அவர்கள் மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இங்கும் சில தலைவர்கள் உள்ளார்கள் அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை குடும்பத்தினருக்கு நன்மை கிடைத்துள்ளது. ஆட்சியிலையேயும் அதிகாரத்திலும் குடும்பத்தினருக்கு வழங்கபட்டுள்ளதாக கூறினார். அதிமுகவிற்கு சாதி மதம் கிடையாது ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி, எந்த ஒரு ஆட்சியிலும் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு சில மாதங்களிலையே அற்புதமான மருத்துவமனை கொடுத்தது கிடையாது அதனை செய்தது அதிமுக அரசு, திமுக ஆட்சியில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு ஊசி மருந்துகள் கிடையாது இந்த ஆட்சி தொடர வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
திமுக அரசு ஏழைகளை காப்பாற்றவில்லை, திமுகவில் ஒரு அமைச்சர் இருந்தார் அவர் இப்போது முன்னாள் அமைச்சர் ஆகிவிட்டார். பேருந்துவில் கட்டணமில்லா பயணத்தை கொடுத்துவிட்டு ஓசியிலையே பயணம் என மேடையில் பேசுகிறார். ஒவ்வொருவரும் கொடுக்கும் வரியின் மூலமாக பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. ஆணவமாக பேசிய அமைச்சருக்கு உரிய தண்டனையை கடவுளே கொடுத்துவிட்டார். கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அமைச்சர் பெண்னை பார்த்து நீங்கள் எஸ்சியா என கேட்டவர் தான் முன்னாள் அமைச்சர் என பொன்முடி பெயரை சொல்லாமல் சுட்டி காட்டினார். திண்டிவனத்தில் நகராட்சியில் பணி புரியும் இளநிலை உதவியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வைத்தவர் பெண் திமுக கவுன்சிலர், அரசு ஊழியர் காலில் விழுந்து கதறினார்.
பட்டியலினத்தை சார்ந்தவர்கள் என்றால் ஏளனமாக பேசுபவர்கள்தான் திமுகவினர்
இவர்கள் சமூக நீதி கட்சியா என்றும் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் என்றால் ஏளனமாக பேசுபவர்கள் தான் திமுகவினர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது. கஞ்சா போதைபொருட்கள் தமிழகத்தில் சாதாரணமாக கிடைப்பதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதத்தில் எங்கே பார்த்தாலும் கற்பழிப்பு கொலை, கொள்ளை போன்றவைகள் நிகழ்வதாகவும், மக்களை பற்றி கவலை கொள்ளாத திமுக தமிழக அரசாங்கம் உள்ளது. மாநிலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், முதியோர்களை தாக்கி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் பயன்பெறுகிறார்கள், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், துர்கா ஸ்டாலின் என்ற நான்கு அதிகார மையங்கள் தாங்கள் தமிழகத்தை ஆட்சி செய்வதாகவும், உதயநிதி ஸ்டாலின் அதிமுக ஐசியூவில் உள்ளதாக தெரிவிக்கிறார். இங்கே கூடிய கூட்டதை பாருங்கள் அப்போது உங்களுக்கு தெரியும். தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆனால் நாவினால் சுட்ட புண் ஆறாது. அதனால் எச்சரிப்பதாகவும், அதிமுகவிற்கு ஒரு போதும் ஆம்புலன்சில் அழைத்து செல்லும் நிலை ஏற்படாது. ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆம்புலன்சில் அழைத்து செல்லும் நிலை ஏற்படும் என கூறினார்.
பேசும்போது எதை பேச வேண்டும் என்பதை தெரிந்து பேச வேண்டும் எனது விரல்கள் ஆடவில்லை ஆனால் சிலருக்கு பேசும் போதே விரல்கள் ஆடுகின்றன. உதயநிதி ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக தெரிவிப்பதாகவும் உங்களின் தாத்தாவையே அசச்சி பார்த்தவர்கள் தான் அதிமுகவினர் கருணாநிதி ஸ்டாலின் என்ற அடையாளத்தினால் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ வாக ஆகியிருக்கிறார்.
திமுகவை ஆம்புலன்சில் அழைத்து செல்லும் நிலை ஏற்படும்!
உழைத்து அவர் பதவிக்கு வரவில்லை ஆனால் அதிமுகவில் விஸ்வாசத்தினால் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறினார். திமுகவில் உழைத்தவர்கள் பயனடைவில்லை துரை முருகன் எவ்வளவே உழைத்தாலும் அவருக்கு துணை முதல்வர் பதவி திமுகவில் அளிக்கப்படவில்லை. திமுகவினர் வீடு வீடாக சென்று படிவத்தை எடுத்து கொண்டு திமுகவில் சேருங்கள் என தெரிவிக்கிறார்கள். அவர்கள் அதிமுகவை பார்த்து அதிமுக ஐ சி யூ வில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள். திமுக அரசாங்கத்திற்கு மக்கள் வெண்டிலேட்டரை வைத்துள்ளார்கள் வெண்டிலேட்டரை எடுத்தால் எப்படி உயிர் போகுமோ அதுபோல் ஏப்ரல் மாதத்தில் திமுகவிற்கு உயிர் போகும், சட்டமன்ற தேர்தல் 2026 ல் திமுகவின் கதை முடிந்துவிடும், அதிமுக அரசு அமைந்தவுடன் வீடு இல்லாதவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடம் வாங்கி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவசமாக வீடு கட்டி தரப்படும் என தெரிவித்தார்.
கள்ளகுறிச்சியில் அமோகமாக கள்ளச்சாரயம் விற்பனை நடைபெற்று 68 உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இதற்கு தீவிர விசாரனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பின்புலத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகின. தமிழக திமுக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மக்களுக்கு எந்த பயணம் இல்லை, அதிமக ஆட்சி அமைந்தவுடன் ஏரியில் தூர்வாரப்பட்டு வண்டல் மண் விவசாயிகளின் நிலத்திற்கு இலவசமாக வழங்கப்படும் இந்தியாவிலையே விவசாயிகளின் பயிர்கடனை இரண்டு முறை ரத்து செய்தது அதிமுக அரசாங்கம் உள்ளது.
அமலாக்கத்துறை கதவை தட்டும்
திமுக அரசு வேண்டுமென்றே விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாங்கமாக செயல்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கலப்பின ஆடுகள், கலப்பின பன்றிகள் வளர்பதற்காக வழங்கப்படும். அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட கால்நடை பூங்கா என்பதால் திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை. மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி, தாலிக்கு தங்கம் திட்டம், திருமண திட்டம், மணப்பெண்ணுக்கு பட்டு சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வழங்கபடும், திமுகவில் பல அமைச்சர்களுக்கு தூக்கம் போய்விட்டது எப்போது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை கதவை தட்டும் என பயத்தில் உள்ளனர். அவ்வளவு ஊழல் நிறைந்து விட்டது. திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் 22 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது. ஏற்கனவே இருந்த டிஜிபி கஞ்சாவை தடுக்க 2.ஓ , 3.ஓ என் ஓ போட்டு கொண்டே ஓய்வு பெற்று சென்றுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.