விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கும், நாம் தமிழருக்கும் தான் போட்டி, திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி என விக்கிரவாண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும், யாருக்கும் தெரியாமல் சாராயம் விற்கப்பட்டது என்பதை எப்படி நம்ப முடியும், அரசு தன் தவறை மறைக்க லஞ்சம் கொடுக்கிறது. மக்களை குடிக்க வைத்து அரசு கொள்கிறது. கருப்பு சட்டை அணிந்து ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் போராடினார்கள். ஆனால் தற்போது அது குறித்து பேசுவதில்லை. கள்ளுக்கு தடை உள்ளது. ஆனால் கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறது. ஏன் கள்ளுக்கடையை அரசு திறப்பதில்லை. தொகுதியில் சாராயம் காச்சுவது சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாது என சொன்னால் அதனை எப்படி நம்ப முடியும், வசந்தம் கார்த்திகேயேன், உதயசூரியன் ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தெரியாமல் எப்படி சாராயம் காய்ச்ச முடியும். பாமக நிறுவனர் சொன்ன அதே புகாரை நானும் சொல்கிறேன் எனக்கு நோட்டீஸ் அனுப்ப சொல்லுங்கள் பார்ப்போம்.


அரசு மதுபான விலை அதிகம் உள்ளதால் சாராயத்தை வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த முறை 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறை 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள். இதனால் என்ன பயன். நீட்-டை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி. இதில் திமுகவுக்கும், நாம் தமிழருக்கும் தான் போட்டி. பாஜக சாதி, மதம் இரு கண்கள் என சொல்கிறது. நாம் தமிழர் அது சமூகத்தின் புண்கள் என கூறுகிறது. முன்னாள் நீதிபதி சந்துரு குழு அறிக்கையை ஏற்கிறேன்” என்றார்.


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது. கள்ளக்குசிறிச்சியை கள்ளச்சாராயக்குறிச்சியாக மாற்றியது தான் திமுக சாதனை. அதிமுக, தேமுதிக வாக்குகள் நாம் தமிழருக்கு சென்றுவிடும் அச்சத்தில் திமுக உள்ளது. அதனால் பணத்தை அதிகாமக செலவு செய்வார்கள். திமுகாவை சேர்ந்த ஒவ்வொரு அமைச்சரும் இருபது கோடி செலவு செய்ய திட்டம் வைத்துள்ளனர். கள்ளகுறிச்சி சம்பவத்தில் தார்மீக பொறுப்பேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியிருக்க வேண்டும். அரசு நிவாரனம் என்ற பெயரில் தவறை மறைக்க முயல்கிறது. சட்டப்படி தவறான ஒரு செயலை செய்து உயிரிழந்தவர்களுக்கு சட்டப்படி பத்து லட்சம் பணம் கொடுக்கப்படுறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் கூறினார்.