விழுப்புரம் : அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். திமுகவை ஒழிக்க எம் ஜி ஆர் விரும்பினார். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லை, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், உங்களுடைய எதிரி திமுக தான், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமகவிற்கு வாக்களியுங்கள் என அன்புமணி பேசினார்


விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கௌரவத்தலைவர் கோ க மணி, வழக்கறிஞர் பாலு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் சமூகநீதி பெற பாமக வெற்றிபெற வேண்டும்


இத்தேர்தல் தமிழக மக்களுக்கு முக்கியமான தேர்தலாகும். தமிழக மக்கள் சமூகநீதி பெற பாமக வெற்றிபெற வேண்டும் வேண்டும்.  திமுக வேட்பாளர் வெற்றால் அவர் குடும்பம் முன்னேறும். பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடு நடைபெறும். அடுத்தமாதமே 10.5 சதவீதம் கொடுக்கப்படும். திமுக அமைச்சர்கள் கொண்டு வந்த மூட்டையில் உள்ளதை கொடுக்கும்போது வாங்குவதும் வாங்காத உங்கள் விருப்பம்.


தமிழகத்தின் வாழ்க்கை பிரச்சினை உங்கள் கையில் உள்ளது. இந்த மண் செய்த தியாகத்திற்கு இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். இன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் ஜி கே மணி எப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு கொடுப்பீர்கள் என்று கேட்டபோது, முதல்வர் ஸ்டாலின் கூறியது என்னவெனில், நீங்கள் உங்கள் கூட்டணி கட்சியோடு பேசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.


ஏற்கனவே பீகார் மாநிலத்தில் இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக முதல்வர் தவறாக கூறியுள்ளார். கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடு சதவீதத்தைதான் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.


இவர்களில் யார் பொய் சொல்கிறார்கள்?


சமூக நீதிக்கும் இன்றைய திமுகவிற்கும் சம்மந்தமில்லை. கடந்த விக்கிரவாண்டி இடை தேர்தலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்னாயிற்று ?  10.5 சதவீதம் கொடுக்க முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று கூறுகிறார்.


தர்மபுரியில் உதயநிதி பேசும்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று கூறி வாக்குகள் பெற்ற பின் ஏமாற்றியுள்ளார்.  


இதுதான் சமூகநீதியா வெட்கக்கேடு. முதல்வர் தரவுகள் இல்லை என்கிறார். அமைச்சர் சிவசங்கர் தரவுகள் உள்ளது என்கிறார். இவர்களில் யார் பொய் சொல்கிறார்கள்? இது என்ன மோசடி?  


கலைஞர் இருந்திருந்தால் இன்னேரம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்


இந்தியாவில் 6 இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது பாமக. கலைஞர் இருந்திருதால் இன்னேரம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். கலைஞர் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய காரணம் பாமகதான். இது குறித்த வழக்கை கலைஞருக்காக பாமக  திரும்பபெற்றது. கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களில் 90 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள். இச்சாவுகளுக்கு 2 எம் எல் ஏதான் காரணம் என்று பள்ளி செல்லும் சிறுவர்கள் கூறுகிறார்கள். இச்சாவு குறித்து  சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறோம். சிபிசிஐடி போலீஸார் மீது மரியாதை உள்ளது. நம்பிக்கை இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஊராட்சிமன்ற தலைவருக்கு உரிமை உள்ளது. ஆனால் முதல்வர் உரிமை இல்லை என்கிறார்.


எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்


அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். திமுகவை ஒழிக்க எம் ஜி ஆர் விரும்பினார். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லை, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், உங்களுடைய எதிரி திமுக, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமகவிற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். வாக்கு சேகரிப்பின் போது இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததால் வழி விட கூறி அன்புமணி பேச்சை நிறுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.