விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளது என்ற வதந்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்படி எந்த திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


வேளாண்மை வளராமல் வருமையை ஒழிக்க முடியாது


விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாமகவின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான 17வது வேளாண் நிதி நிழல் அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கெளரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர்  வெளியிட்டனர். அதன் பின்பு பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவின் வேளான் பட்ஜெட்டில் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி மதிப்பீடு கொண்டதாகவும் இதில் 60 ஆயிரம் கோடி வேளண்துறை மூலம் செலவிடவும், நீர்பாசனங்களுக்கு 20 ஆயிரம் கோடி செலவிட கோரி வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டினை விட அதிகமாகும் என்றும் வேளாண்மை வளராமல் வருமையை ஒழிக்க முடியாது தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி நிதி  நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென பாமக சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வந்ததில் திமுக ஸ்டாலின் தலைமையிலான அரசு  பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை  வெளியிடபட்டு வருகிறது என கூறினார்.


வேளாண்மை மூதலீட்டாளர்கள் மாநாடு


வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் வேளான் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுவதாகவும், நீர் பாசன ஏரிகளை மீட்டெடுத்தல் மூலம் 40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தி தருவதே முக்கியம் நோக்கம் என்றும் தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில்  15 ஆயிரம் ஏக்கர் ஏரிகள் காணமல் போய் உள்ளது. 27000 ஏரிகளின் கொள்ளவு ஆகிரமிப்பால் குறைந்து விட்டது. காணமல் போன ஏரிகளை மீட்டெடுக்கவும்,  ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும் என கூறினார். வேளாண்மை தொழிற்சாலைகள் அமைக்க வேளாண்மை முதலீட்டாளர்கள் மாநாடு தஞ்சாவூரில் 6.04.2024 நடத்தப்படும் என்றும் வேளாண்மை மூதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்,நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் குவிண்டாலுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். 


என் எல் சி 3 வது சுரங்கத்திற்கு நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது


கரும்பு டன் 2024- 25 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் 5000 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும். நியாய விலைக்கடையில் நாட்டு சர்க்கரை வழங்கப்படும் இதற்கு 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என் எல் சி 3 வது சுரங்க திட்டம் முதல் இரு சுரகங்களை விரிவாக்கும் திட்டத்திற்கு தடை விதிக்கப்படும். இதற்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது பாமக நிறுவனர் ராமதாஸ் நிழல் நிதி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதனை தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாசின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளது என்ற வதந்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்படி எந்த திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இல்லை என  அவரே தெரிவித்துள்ளார்.