விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2010-ல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இங்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதால் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டம், அதிக தூரம் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளை கொண்ட மாவட்டமாக அமைந்துள்ளதால் விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு துரித பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதன் மூலம் விபத்து மற்றும் உயிர்பலிகள் குறைந்துள்ளது.
இந்த மருத்துவமனை விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பகுதிகளிலிருந்து அதிகளவிலான பொதுமக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியின் நுழைவாயில் பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாததனால் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்து நிலையத்தில் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி பேருந்து நிலையத்தில் தற்காலிக நிழற்குடையாவது அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்