புதுச்சேரி:  தல தளபதி படம் வெளியாவது ஒட்டி புதுச்சேரி முழுதும் பேனர்கள் களை கட்டியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு படமும், தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. துணிவு படத்தின் ட்ரைலர் 31-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்களான இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகைக்கு திரை விருந்தாக அஜித் நடித்துள்ள  துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் வெளிவரும் நிலையில் புதுச்சேரி நகர மற்றும் கிராமங்களில் உள்ள 16 திரையரங்கங்களும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இதனை ஒட்டி நகரம் மற்றும் கிராமங்கள் முழுதும் அஜித்- விஜய் பேனர்களை ரசிகர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர். நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் இரு நடிகர்களின் கட் அவுட்- பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளன. 


இதில் உச்சகட்டமாக காமராஜ் சாலையில்  "தல தளபதி" என குறிப்பிட்டு விஜய்க்கும் அஜித்துக்கும் ஒரே கட்அவுட் ரசிகர்கள் வைத்துள்ளனர். இதில் புல்லட்டை அஜித் ஓட்டுவது போலவும் பின்னால் விஜய் உட்கார்ந்து வருவது போலவும் உள்ளது. இது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. புல்லட்  நம்பர் பிளேட்டில் எண்களுக்கு  பதிலாக "தல தளபதி' என குறிப்பிடப்பட்டுள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.