புதுச்சேரி:  புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள திருவண்டார்கோவில் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பண்ணிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அந்த பகுதியை சேர்ந்த உறவினரான பரசுராமன் (வயது 21) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.


இதனால் அந்த மாணவி பள்ளி செல்லும்போதும், வரும்போதும் பரசுராமன் வழிமறித்து காதலிக்குமாறு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அவர் பரசுராமனை கண்டித்துள்ளார்.


மாணவி கடத்தல்:


இந்தநிலையில் நேற்று மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மாணவியின் தாயார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பரசுராமன் தங்களது மகளை நண்பர்கள் உதவியுடன் கடத்தி விட்டதாக கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், அவரை கடத்திய பரசுராமன் மற்றும் நண்பர்கள் ஹரிகரன், சிவா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவியை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் :


திண்டிவனம் நகராட்சியில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா அறிவிப்பு - காரணம் என்ன..?


தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 20% கூடுதலாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்


ஆய்வுக்கு வருவதை கண்டு உணவகத்தை மூடிய உரிமையாளர்; சுவர் எகிறிகுதித்து ஆய்வு செய்த அதிகாரிகள்