புதுச்சேரி முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.டி. எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பபட்டு வருகிறது. ஏற்கனவே 2-ம் கட்ட கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்ற மாணவர்கள் கடந்த 12 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சென்று சேர்ந்தனர்.
‘5 மாநில தேர்தல்.. அடுத்து தமிழகத்தை குறிவைக்கும் பாஜக’ எச்சரித்த திருமா
இதற்கிடையே மத்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நீட் நுழைவுத் தேர்வில் பொதுப்பிரிவினர் 35 சதவீதம் (247 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். இதே போல் எஸ்.சி., எஸ்.சி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 25 சதவீதம் (210 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் 30 சதவீதம் (229 மதிப்பெண்கள்) பெற்றால் போதும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
RS Bharathi on Jayakumar: ‘சட்ட அமைச்சராக இருந்தவருக்கு சட்டம் தெரியாதா?’ கலாய்த்த R.S பாரதி
அதன் அடிப்படையில் சென்டாக் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் வருகிற 18-ந் தேதி வரை சென்டாக் இணைய தளத்தில் ( www.centacpuducherry.in ) சென்று பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின்னர் சென்டாக் இணையதளத்தில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும் சென்டாக் கன்வீனர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்