காரைக்காலில் திருமணம் செய்வதாக கூறி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த  ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி வழக்கம் போல் கடந்த 7 ஆம் தேதி பள்ளிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். மாணவியை யாரேனும் கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.




காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு நித்தின் கவுலால் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து மாணவியை தேடி வந்தனர். மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது அது சென்னையில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை சென்ற தனிப்படை போலீசார் தங்கும் விடுதியில் வாலிபர் ஒருவருடன் தங்கியிருந்த மாணவியை மீட்டு காரைக்கால் அழைத்து வந்தனர்.


மாணவியிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த செட்டிமண்டபம் முத்தையா நகரை சேர்ந்த முஷாரப் (22) என்பவருடன் மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் அவர் அம்பகரத்தூர் வந்து மாணவியிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். மேலும் மாணவியை திருமணம் செய்வதாக கூறி சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதை  தொடர்ந்து சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், முஷாரப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




போக்சோ சட்டம் என்றால் என்ன?


போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர