கடலூர் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் சரவணன், இவருக்கும் வன அலுவலராக பணியாற்றி வரும் 29 வயது பெண்ணிற்கும் கடந்த மே மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்து உள்ளது. ஆனால், திருமதிற்கு முன்பே பெண் வீட்டாரிடம் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது, பின்னர் திருமணம் முடிந்த பிறகும் அந்த பெண்ணின் கணவர் வீட்டில் 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதலாக வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தி வந்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை திட்டி மன வேதனைக்கு உள்ளாக்கி வந்து உள்ளதாக தெரிகிறது.

 



 

இந்த சூழலில், அவர் தற்பொழுது 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்து உள்ளார், ஆனால் கர்ப்பிணி என்றும் பாராமல் சரவணனின் குடும்பத்தினர் அவருக்கு கஷாயம் போன்ற திரவத்தை கட்டாயப்படுத்தி கொடுத்து உள்ளனர். இதன் காரணமாக அவரின் கர்ப்பம் கலைந்த சோகம் நிகழ்ந்து உள்ளது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான பெண் வன அலுவலர், இது குறித்து அந்த பெண் வன அலுவலர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உண்மை என தெரிய வந்தது, பின்னர் அதனை தொடர்ந்து கணவர் ஐயப்பன், மாமியார் மல்லிகா மற்றும் பெண்ணின் இரண்டு நாத்தனார்கள் மீது வழக்கு பதிவு செய்து கணவர், மாமியாரை இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வன துறையை சேர்ந்த பெண்ணிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் எவ்வாறு மற்ற பெண்கள் இந்த விதமான சூழலை கடந்து வருவார்கள் என்பது தெரியவில்லை, ஏன் எனில் நிறைய பெண்கள் இது போன்ற சம்பவங்களை வெளிக்கொணர முன் வர தயக்கம் தெரிவிக்கின்றனர், ஆகையால் இனி வரும் காலங்களில் இது பொள் எந்த பெண்ணிற்கும் ஏற்பட கூடாது என்றால் காவல் துறை சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பட வேண்டும், என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும் கடலூரில் கர்ப்பிணி பெண்ணை சொந்த கணவன் மற்றும் மாமியாரே மருந்து குடிக்க வைத்து கருவை கலைத்து சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.