புதுச்சேரி : தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


தீபாவளி பரிசு : 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ


புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, நமது மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ரேஷன் கடைகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது. தீபாவளிக்கு முன்பாக அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்துள்ளோம். முதலில் ரேஷனில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி தீபாவளிக்காக இலவசமாக வழங்கப்படும்.


கடைகளில் பணியாற்றுவோருக்கு ஒரு மாத சம்பளம் தரப்படும். பிறகு தொடர்ந்து சம்பளம் தர நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷனுக்காக ரூ. 1.45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். அடுத்து அரிசி, சர்க்கரை டெண்டர் எடுத்து வழங்குவோம். இலவச அரிசியை வீடு தேடி சென்று தர அரசு ஆலோசனை செய்யும். ரேஷன் கடை திறந்தவுடன் அங்கேயே தருவோம். மாநில அரசு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் எண்ணமும் உள்ளது.


அழைப்பு வந்தால் பிறகு சிந்திப்போம்!


நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள், அவர் நன்றாக வரவேண்டும் , மனதார வாழ்த்துகிறேன். இதுவரை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் பிறகு சிந்திப்போம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


தீப ஒளித்திருநாள்


தீபாவளி (Deepavali, Diwali) திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.


தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிசி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்