விழுப்புரம் : மோடிக்கு பதவி கொடுத்த எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர்  அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி. அப்படி பட்ட அத்வானியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு 75 வயதாகியும் மோடி  செல்லவில்லை. பாஜகவில் சட்டதிட்டங்களை அவருக்கு ஏற்றார்போல் மாற்றிவிட்டதாக சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

அதிமுக சார்பில் கோலியனூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்  செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சன்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டபோது நிர்வாகிகள் வருகை பதிவேட்டினை பார்த்த சிவி சண்முகம் முக்கிய நிர்வாகிகள் யார் யாரெல்லாம் கூட்டத்திற்கு வருகை புரியவில்லை என்பதை அறிந்து கொண்ட அவர் நிர்வாகிகள் ஏன் வரவில்லை என்றும் வராதவர்கள் பெயர்களில் நிர்வாகிகள் ஏன் கையெழுத்திட்டுள்ளனர் என கட்சி நிர்வாகிகளை சராமாரியாக கேள்வி எழுப்பி கடிந்து கொண்டு கட்சியின் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் தவிர்க்க கூடாது என வலியுறுத்தினார்.

 

அப்போது கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம் குடும்பத்திற்காக உழைக்கும் கட்சியாக திமுக உள்ளதாகவும், பொட்டி கொடுத்து பதவி வாங்குவதற்கு இது ஒன்னும் திமுக கிடையாது. உழைப்பவர்களுக்கு கேட்காமலேயே பதவி கொடுத்து அழகுபார்ப்பது தான் அதிமுக என்றும் கிளைகழக செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று பொதுச்செயலாளராக உள்ளார் இது திமுகவில் நினைத்து பார்க்க முடியாது நேற்று தொடங்கிய கட்சியில் கூட வாரிசு அரசியல் நிலைமை தான் உள்ளதாக தெரிவித்தார்.

 

பாஜகவில் 75 வயது நிரம்பினால் பதவியை விட்டு வீட்டிற்கு செல்லவேண்டும் மோடிக்கு பதவி கொடுத்த எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார், அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி அப்படி பட்ட அத்வானியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் மோடிக்கு 75 வயதாகியும் செல்லவில்லை பாஜகவில் சட்டதிட்டங்களை அவருக்கு ஏற்றார்போல் மாற்றிவிட்டதாகவும், பீகார், உத்திரபிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் குடும்ப வாரிசுகள் தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி வழங்கபடுவதாகவும், புதிய கட்சி ஆரம்பிக்கும் போதே மனைவி பிள்ளகைகளை கட்சிக்கு அழைத்து வந்துவிடுவார்கள் அது போன்று அதிமுகவில் இல்லை என கூறினார்.

 

அதிமுக ஒவ்வொரு காலகட்டதிலும் அழித்து போய்விடும் என்று கூறியவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போய் இருப்பதாகவும்,அதிமுக அழியவில்லை தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கமாக அதிமுக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும்,

 

இன்னும் இரண்டு தேர்தலுக்கு பிறகு சமூக வலைதளங்களில் தான் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் நிலை ஏற்படும், கொடியேந்துவது எந்த அளவிற்கு முக்கியமோ அதுபோன்று அதிமுகவை பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு நிர்வாகிகள் பதிலளித்து பதிவு போடவேண்டும்.

 

திமுகவில் உள்ள துரைமுருகன் லோ லோ லோனு அலைந்தார் அவருக்கு கலைஞரை தெரியும், அண்ணாவை தெரியும், பெரியாரை தெரியும் என்றார் ஆனால் உதயநிதிக்கு உங்களை தெரியுமா விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு பிறகு அவரது மகனோ கடலுரில் அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு பிறகு அவரது மகனோ வேலூரில் துரைமுருகனுக்கு பிறகு அவரது மகன் என்றபோது தனக்கு பிறகு தனது மகன் என்று கூறியது போல் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியை துணை முதல்வராகியுள்ளதாக சிவி சண்முகம் சாடியுள்ளார்.