புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை சார்பில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.4.47 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் முறைகோடு நடந்தாக கூறப்படுகிறது. இதுபற்றி கரிக்கலாம்பாக்கம், - மடுகரை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜீஸ் கடை உரிமையாளரும் சமூக ஆர்வலருமான தணிகாசலம் என்பவர் அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தார்.


தகவல் பெறும் உரிமைச் சட்டம்


ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இந்த புகாருக்கான விளக்கம் சில தினங்களுக்கு முன்பு கிடைத்தது. ஆனால் அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தரமற்ற சாலை போட்டதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தணிகாசலம் இன்று காலை கரிக்கலாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் தனது சொந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்தி போராட்டம் நடத்தினார். பலரும் இந்த வாகனம் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


கைது நடைவடிக்கை:


தகவல் அறிந்த கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தை எரித்த தணிகாசலனை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடு நடந்ததை மக்களுக்கு வெளிப்படுத்திய தணிகாசலத்தை கைது செய்ததற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.