விழுப்புரம்‌ மாவட்டத்தை பிளாஸ்டிக்‌ இல்லாத மாவட்ட மாற்றிட பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பும்‌ மற்றும்‌ ஆதரவுதர வேண்டும்‌ மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌ பழனி, தகவல்‌.


தமிழக அரசின்‌ சுற்றுச்சூழல்‌, காலநிலை மாற்றம்‌ மற்றும்‌ வனத்துறை மற்றும்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்‌ இணைந்து அனைத்து, மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன்‌ இணைந்து ஒருமுறை மட்டும்‌ பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ தடையினை செயல்படுத்தி வருகின்றது. இவற்றில்‌ பிளாஸ்டிக்‌ கைப்பைகள்‌ மற்றும்‌ நெய்யப்படாத கைப்பைகளின்‌ தடையினை அளவு மற்றும்‌ தடிமன்‌ வரையின்றி, தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது.


தடையாணையில்‌ குறிப்பிட்டுள்ளபடி பாலி எத்திலீன்‌ டெரிப்தாலேட்‌, உயர்‌ அடர்த்தி பாலிஎதிலீன்‌, வினைல்‌, குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன்‌, பாலிப்ரோப்பிலீன்‌, பாலிஸ்டைரின்‌ ரெசின்கள்‌ போன்ற அதிக மூலக்கூறு எடைகொண்ட பாலிமரில்‌ ஒருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச்‌செல்லும்‌ தன்மைகொண்ட பிளாஸ்டிக்‌ கைப்பைகள்‌, உபயோகிப்பதற்கும்‌. கையாள்வதற்கும்‌ கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


தற்போது, நெய்யப்பட்ட பைகள்‌ அல்லது ரபியன்‌ பைகள்‌: என்ற பெயரில்‌ பிளாஸ்டிக்‌ கைப்பைகள்‌, விற்பனையாளர்களிடமும்‌, கடைக்காரர்களிடமும்‌ மற்றும்‌ ஜவுளி கடைகள்‌, பேரங்காடிகள்‌, ஷாப்பிங்‌ மால்கள்‌ போன்ற வணிக நிறுவனங்களிலும்‌ பூ, உணவு, காய்களிகள்‌, மளிகைப்‌ பொருட்கள்‌, ஐவுளி முதலியவைகளை விநியோகிக்க உபயோகப்படுகின்றது. இதுபோன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌


பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறிவிடுகிறது. இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள்‌ ஏரிகள்‌, ஆறுகள்‌, கடல்‌ போன்ற நீர்நிலைகள்‌ மற்றும்‌ நிலத்தில்‌ வாழும்‌ உயிரினங்களுக்கு பெரும்‌ அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படும்‌ பிளாஸ்டிக்கை தயாரிப்பதோ, விற்பனை செய்வதோ மற்றும்‌ விநியோகிப்பதோ தமிழக அரசின்‌ தடை அறிவிப்பை மீறும்‌ குற்ற செயலாகும்‌.


ஒருமுறை பயன்படும்‌ பிளாஸ்டிக்‌ இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு. தமிழக அரசால்‌ அமல்படுத்தப்பட்ட தடையை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக்‌ கைப்பைகளை எந்த நிலையிலும்‌ பயன்படுத்துவதைத்‌ தடுக்க மக்களின்‌ ஒத்துழைப்பும்‌ ஆதரவும்‌ தேவை என்பதனை தமிழக அரசு வலியுறுத்துகிறது.


எனவே, நமது பூவுலகம்‌ எதிர்கொள்ளும்‌ பெரும்‌ அச்சுறுத்தலை அகற்றுவதற்கு பொறுப்புள்ள குடிமகனாக “ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்‌ மற்றும்‌ "சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம்‌” என உறுதிமொழி மேற்கொள்வதோடு, அதை உறுதியுடன்‌ பின்பற்றுவோம்‌ என மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌ சி.பழனி, அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர