விழுப்புரம் : தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது நிதி பற்றாக்குறை 60 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தபோதிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை அறிவித்த சிறப்பாக தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழாவினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் துவங்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், சிவா, சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கிவைத்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை கடந்த முறை விடுபட்டவர்களை இணைத்து இன்று 17 லட்சம் பயனளிகளுக்கு வழங்கி அதிகரித்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தான் பெண்களுக்கு என பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தி வருவது அனைவரும் அறிவார்கள் என தெரிவித்தார். ஆட்சிக்கு வரும்போது நிதி பற்றாக்குறை 60 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தது அந்த நிலையிலும் கொரோனா காலத்திலும் இத்திட்டத்தினை அறிவித்து சிறப்பாக முதல்வர் செயல்படுத்தி வருவதாகவும்,
தமிழக முதலமைச்சர் அறிவித்த பல்வேறு திட்டங்களை இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய அளவிற்கு ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டதை 10 மாநிலங்களில் பின்பற்றபடுகிறது டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் கூட நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இந்த எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்கிற முயற்சியினை செய்து கொண்டிருக்கின்றனர் ஆனால் தமிழகத்தில் முதலமைச்சர் இந்த எண்ணிக்கையை உயர்த்தி செயல்படுத்தி வருவதாக கூறினார்.
தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக கையெழுத்து போட்ட தவிடியல் பயணதிட்டம் மூலம் பெண்கள் 800 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை சேமிக்க துவங்கியுள்ளனர் எனவே முதலமைச்சரின் முக்கியமான பல்வேறு திட்டங்களில் இந்த திட்டம் மிகவும் முக்கியமான திட்டமாக உள்ளதாகவும் பெண்கள் இந்த விடியல் பயண திட்டத்தின் மூலம் இதுவரை 58 லட்சம் மகளிர் 730 கோடி முறை பயணம் செய்துள்ளதாகவும், இதனால் அரசு இந்த திட்டத்திற்கு 3600 கோடி போக்குவரத்து துறைக்கு ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருவதாகவும் பெண்களின் கல்வி நலனுக்காக புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.