விழுப்புரம்: திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும் தமிழகத்தில் போதை பொருள் எங்கு பார்த்தாலும் கிடைப்பதாகவும் காவல்துறை செயலிழந்து திமுகவின் ஒரு அங்கமான செயல்படுபதாக சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.


விழுப்புரத்தில் கடந்த 29ஆம் தேதி எம்.ஜி சாலையில் இயங்கி வரும் ஜோதிவிருட்சம் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்த இப்ராஹிம் என்பவரை கஞ்சா போதையில் இருந்த ராஜசேகர், வல்லரசு ஆகிய இரு சகோதர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று உயிரிழந்த இப்ராஹிம் குடும்பதினரை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி.சண்முகம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அதிமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


அதனை தொடர்ந்து  பேட்டியளித்த சிவி.சண்முகம், திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு  ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும் தமிழகத்தில் போதை பொருள் எங்கு பார்த்தாலும்  கிடைப்பதாகவும் காவல்துறை செயலிழந்து திமுகவின் ஒரு அங்கமான செயல்படுபதாக குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில்  24 மணி நேரமும் மதுவிற்பனை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் கஞ்சா தங்கு தடையின்றி கிடைப்பது குறித்து அதிமுக சார்பில் எதிர்கட்சி தலைவர் சட்டமன்றத்திலும் பேசியுள்ளதாகவும் ஆளுநரிடமும் புகார் அளித்துள்ளதாக கூறினார்.  விழுப்புரம் மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டும் காணாமல் காவல்துறை தூங்கிக்கொண்டு இருப்பதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையால் தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 


சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர் இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பட்டப்பகலில் குத்தி கொலை செய்துள்ளதை மறைத்து குடும்ப சண்டையால் கொலை சம்பவம் நிகழ்ந்ததாக முதலமைச்சர் சட்டபேரவையில் கூறியுள்ளார். ஆனால் கொலை செய்த இருவரும் திமுகவின் உறுப்பினர்கள் அதனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் எந்த வனிகரும் மிரட்டப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் திறமையற்ற முதல்வரின் கீழ் காவல்துறை செயல்படுதால் இன்று காவல்துறை கைகள் கட்டபட்டு கஞ்சா விற்பனைக்கு துனை போகும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சி.வி. சண்முகம் தெரிவித்தார். 


மேலும் ரவுடிசம் செய்யும் யாராக இருந்தாலும் தமிழக முதலமைச்சர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் அது அதிமுகவினராக இருந்தாலும் திமுகவினராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் பொம்மை முதல்வரை போன்று தமிழக டி ஜிபியும் பொம்மை அதிகாரியாக செயல்படுவதாகவும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் இழப்பீடு அறிவிக்காத நிலையில் அதிமுக சார்பில் ஒருலட்சம் நிதி நாங்கள் வழங்கியுள்ளதாக கூறினார். தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் நலன் காக்கும் திமுக என பேசும் முதல்வர் தற்போது நிதி கொடுக்கவில்லை அரசு சார்பில் உடனடியாக நிதியுதவி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.