விழுப்புரம்: தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 1,069 நபர்களிடம் ரூ.93 லட்சத்து 55 ஆயிரத்தை மோசடி செய்த பெண்ணை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 4 தேடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் வசந்தபுரத்தை சேர்ந்த காத்தலிங்கம், அவரது மனைவி பூங்கொடி, மகன் நிர்மல்குமார், மகள் மகாலட்சுமி, உறவினர் விக்னேஸ்வரன் ஆகிய 5 பேர்  சேர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம்  புதுச்சேரி மாநிலம் ரெட்டிப்பாளையம் ஜெயா நகரை சேர்ந்தவர் ஜோதி (வயது 50) என்பவர் தனக்கு கீழ்  23 பேரை  முகவர்களை வைத்துகொண்டு கடந்த 15.11.2021 முதல் 10.10.2022 வரை வானூர், பட்டானூர், வசந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1,069 நபர்களிடமிருந்து மளிகைப்பொருட்கள் சீட்டு, நகை சீட்டு, தீபாவளி பண்டுசீட்டு என்று 93 லட்சத்து 55 ஆயிரத்தை வசூல் செய்து பூங்கொடி, காத்தலிங்கம் உள்ளிட்ட 5 பேரிடமும் கொடுத்துள்ளனர்.


பணத்தை பெற்ற அவர்கள் 5 பேரும், ஜோதிக்கு உரிய நகைகள், மளிகைப்பொருட்கள் மற்றும் பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி தலைமறைவாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட  ஜோதி மற்றும் அவருக்கு கீழுள்ள முகவர்கள் இணைந்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த  பூங்கொடி உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கொடியை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காத்தலிங்கம் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.