திட்டக்குடி அருகே நண்பனை கடத்திய கும்பலை போலீசார் விரட்டி பிடித்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஏ.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (55) இவருடைய நண்பர் விருத்தாச்சலம் தொட்டிகுப்பத்தை சேர்ந்த குமார் (45) இருவரும் துபாயில் ஏழு வருடங்களாக ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளனர்.
இரண்டு வருடத்திற்கு முன்பு குமார் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 90 பேரிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி கிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18-08-2022 அன்று குமார் மற்றும் அவரது நண்பர்களான கிழ்ச்சுருவாயைச் சேர்ந்த செல்வராஜ், ஆனந்தன், பூமாலை, முருகன் ஆகிய ஐந்து பேரும் கிருஷ்ணனை தனது மகள் வழி பேத்தி மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பொருள் வாங்க திட்டக்குடி பேருந்து நிலையம் சென்றவரை, டாட்டா ஏசி வாகனத்தில் குமாரும் அவருடைய நண்பர்கள் ஐந்து பேரும் ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றுள்ளனர்.
கிருஷ்ணனின் மகன் அன்புச்செல்வன் திட்டக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பு கிருபாலட்சுமி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் காவலர்கள் கிழ்ச்சிறுவாயில் செல்வராஜ் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணனை மீட்டனர். போலீசாரை பார்த்தவுடன் தப்பிவிட முயன்ற நிலையில் போலீசார் கிருஷ்ணனை கடத்திச் சென்ற குமார்,செல்வராஜ், ஆனந்தன், மூவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய பூமாலை, முருகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு!
மக்களை சிரமப்படுத்துவதில் நம்பர் 1 மாடல் அரசாக தி.மு.க செயல்படுகிறது என த.மா.கா., தலைவர் வாசன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கடலுாரில் த.மா.கா., சார்பில், மூப்பனார் பிறந்தநாளையொட்டி நடந்த விவசாயிகள் தின பொதுக்கூட்டத்தி்ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ”நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான நிதிநிலை அறிக்கையில், கடந்த ஆண்டைவிட 5.6 மடங்கு கூடுதலாக ரூ. 1.24 கோடி நிதி அளித்துள்ளது. மேலும், சிறு குறு விவசாயிகளின் நலனையொட்டி, ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி, பயிர் காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் நலனுக்காக பொறுப்புடன் பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவரும் நிலையில், அதற்கு மாறாக, விவசாயிகளை வஞ்சிக்கின்ற வகையில் தமிழக அரசு செயல்படுவது வேதனையாக உள்ளது. இந்தியாவிலேயே, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரே அரசு தி.மு.க.,தான். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாலும், சொத்துவரி, மின்சார வரி என வரிகளை உயர்த்தி மேலும் மேலும் மக்களை சிரமப்படுத்துவதில்லை நம்பர்– 1 மாடல் அரசாக தி.மு.க., திகழ்கிறது. எப்போது இந்த ஆட்சி முடியும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் விவசாய விளை பொருட்களுக்கு விலை இல்லை. இடு பொருட்கள் கொடுப்பதில்லை. மழை, வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவதில்லை. சட்டசபை தேர்தலின்போது, நகைக்கடை தள்ளுபடி என்றார்கள். அதையும் செய்யவில்லை. சட்டமன்ற தேர்தலின்போது, நகையை அடகு வையுங்கள் திரும்பி கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால், தரவில்லை. எனவே, நகைகளை வைத்து ஏமாற்றப்பட்டவர்களிடம் தி.மு.க., மன்னிப்பு கேட்க வேண்டும். எனவே, வரும் லோக்சபா தேர்தலில், இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்