பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் 35-ஆம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் கட்சிக் கொடியை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பாட்டாளி சொந்தங்களுக்கு இனிப்பு வழங்கினார்.


மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,


தமிழகத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க கோரி தமிழக முதல்வரிடம் நான்கு முறை தொலைபேசியில் பேசி உள்ளேன். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பாமகவும் தமிழக அரசும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.  ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களை எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன். ஒன்று ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம். மற்றொன்று, ஒரு சொட்டு மழை நீர் கூட கடலில் போய் கலக்கக்கூடாது. இந்த இரண்டு வரங்கள் மட்டும் போதும் என்று சொல்லுவேன்.


மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை பாமக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. என்னுடைய பட்டாளி மக்கள் சொந்தங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை. எனென்றால் அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை கொடுத்துள்ளோம். இந்நாளில் பாட்டாளி மக்கள் தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட,  ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண