தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் நாளை பொங்கல் என்பதால் கடலூர் மாவட்டத்திலும் பொங்கலுக்கு முக்கிய தேவைகளான கரும்பு, மஞ்சள், காய்கறிகள், பானை போன்ற பொருட்களின் விற்பனை கிடு கிடுவென நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழாக்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது.
அதன்படி 1989 மற்றும் 1990-ம் ஆண்டு களில் இலங்கையில் நிகழ்ந்த போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந் தனர். அவ்வாறு தஞ்சமடைந்த மக்களை தமிழக அரசு, மறு வாழ்வு முகாம் அமைத்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும், சுமார் 80 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல் கடலூர் மாவட்டத்தில் 5 முகாம்களில் சுமார் 1,650 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில் விருத்தாசலம் புலம்பெயர்ந்த இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சுமார் 79 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாம்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பானை, கரும்பு, போர்வை, பாய் மற்றும் பச்சை அரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் முகாம்களில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.
இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் கடலூர் மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் அலி கூறியதாவது ,தளபதி அவர்களின் ஆணைக்கு இணங்க, பொதுச் செயலாளர் எங்கள் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் ஆலோசனையின் பேரில் விருத்தாசலம் புலம்பெயர்ந்த இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் மக்கள் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடும் வகையில் முகாம்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கலுக்கு தேவைப்படும் அடிப்படை பொருட்களான பொங்கல் பானை, கரும்பு,பச்சை அரிசி வெல்லம் மற்றும் தற்பொழுது குளிர் காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் போர்வை, பாய் மற்றும் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் முகாம்களில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது. என கூறினார். மாவட்ட மாணவரணி சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மாணவரணி நிர்வாகிகள் தளபதியின் மக்கள் இயக்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.