கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க வாசல் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 3-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 9-ம் நாள் உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசுவாமி அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு கோவிலில் விசுவரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெறுகிறது. பின்னர் 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது, பின்னர் சொர்க வாசல் திறப்பிர்க்கு பிறகு பூக்கள் மற்றும் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தேவநாத சுவாமி கோயில் வளாகத்தை சுற்றி வந்து கொடி மரம் அருகே வைக்கப்பட்டு அர்ச்சகர்களால் திருப்பாவை பாடப்பட்டது.
ஆனால் வழக்கமாக திருவந்திபுரம் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறி முறைபடி இன்று சொர்க்க வாசல் திறப்பின் போது பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் காலை 6 மணி முதல் வழக்கம் போல் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, எனவே பக்தர்கள் அனைவரும் 6 மணிக்கு மேல் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வந்து பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவித்தனர்.
பின்னர் பக்தர்கள் வரிசையாக நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர். ஆனால் சொர்க வாசல் திறப்பின் பொழுது எப்பொழுதும் பொதுமக்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்வர் ஆனால் தற்பொழுது தங்களை அனுமதிக்காதது வருத்தத்தை அளிப்பதாகவும், ஆனால் தற்பொழுது கொரோனா வேகமாக பரவும் காரணத்தால் தான் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன என்பதால் அனைவரும் அதனை பின்பற்றி நடந்து கொள்கிறோம் என பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டது.