விழுப்புரம்: மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் இருந்து சென்ற நிர்மலா சீதாராமன் பெண்களுக்கான நிதியையாவது தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கலாம் ஆனால் பட்ட நாமம் போடுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவுக்குமார் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தமிழ்நாட்டில் இருந்து சென்ற பெண்மணி நிர்மலா சீதாராமன் பெண்களுக்கான நிதியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கலாம் ஆனால் பட்ட நாமம் போடுள்ளார்கள் தமிழகம் நூறு ரூபாய் வரி கட்டினால் 27 ரூபாய் தான் கொடுத்துள்ளார்கள் ஆனால் உத்திர பிரதேச மாநிலத்தில் 100 ரூபாய் வரி கட்டினால் 220 ரூபாய் ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. பாஜக ஆளும் மாநிலத்திற்கு இரட்டிப்பாக அதிக நிதி ஒதுக்கப்படுகிறது எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் 25 சதவிகிதத்திற்கு குறைவாகவே ஒதுக்கவதாக குற்றஞ்சாட்டினார்.
பிரிட்டிஷ் காரன் காலத்தில் இங்கிருந்து திருடினால் அவர்களது நாட்டிற்கு கொண்டு சென்றார்கள் ஆனால் ஒன்றிய பாஜக அரசு சொந்த நாட்டிலையே திருடி கொண்டு செல்வது மத்திய பட்ஜெட் என்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தான் நிதி ஒதுக்க கூறுகிறோம் ஆனால் ஒன்றிய அரசு அதனை கொடுக்கவில்லை வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டுமென கூறினார்.