விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வெப்பத்தின் பிடியில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விழுப்புரம் புறநகர் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை திடீரென கடும் பனிப்பொழிவு நிலவியது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் தான் பனிப்பொழிவு ஏற்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆக்டோபர் மாதத்திலேயே பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.


இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - திருக்கோவிலூர் மாநில நெடுஞ்சாலைகள் பனிபொழிவால் மூடப்பட்ட நிலையில் காட்சியளித்தது. காலை 8 மணியை கடந்த பிறகும் நிலவிய இந்த கடும் பனிப்பொழிவால் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றது. முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு நிலவிய பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கடந்த சில தினங்களாகவே வெயின் தாக்கம் அதிகரித்து வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்து வந்த விழுப்புரம் பகுதி பொதுமக்களுக்கு, மலைப்பிரதேசங்களில் இருப்பதைப் போல சில்லென்று காணப்பட்ட இந்த பனிப்பொழிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும், திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வெப்பத்தின் பிடியில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திண்டிவனம் புறநகர் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை திடீரென கடும் பனிப்பொழிவு நிலவியது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் தான் பனிப்பொழிவு ஏற்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆக்டோபர் மாதத்திலேயே பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் - திருச்சி மாநில நெடுஞ்சாலைகள் பனிபொழிவால் மூடப்பட்ட நிலையில் காட்சியளித்தது. காலை 8 மணியை கடந்த பிறகும் நிலவிய இந்த கடும் பனிப்பொழிவால் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றது. முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு நிலவிய பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.