விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கூட்டுறவு சங்கங்கள் சார்பில், மின்னணு பணப் பரிமாற்றம் (QR Code) சேவையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, அவர்கள் இன்று (11.10.2023) துவக்கி வைத்தார்.


மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில்,


விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள், மருந்தகங்கள், நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் அனைத்து விற்பனையகங்களிலும் மின்னணு பரிமாற்றம் மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக மாவட்டத்திலுள்ள நியாய விலை கடைகளில் பணமற்ற பரிவர்த்தனையின் மூலம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் தங்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி (QR Code) குறியீட்டினை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி நியாய விலை பொருட்களை பெறக்கூடிய வகையில் தற்போது மின்னணு பரிமாற்றம் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் 1255 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. மின்னணு பணப் பரிமாற்றம் (QR Code) சேவை 128 நியாய விலைக்கடைகளில் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நியாய விலைகளில் இத்திட்டம் 15 நாட்களுக்கு செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மு.பரமேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருமதி யசோதா தேவி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் திருமதி இளஞ்செல்வி, பொதுமேலாளர் திரு.ரவிச்சந்திரன், சார்பதிவாளர் திரு.சந்திரசேகரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


QR Code


கியூ.ஆர். குறி (விரைவு எதிர்வினை- Quick Response குறி) என்பது பட்டைக் குறியீடு வாசிப்பிகளால் (bar code readers), வருடிகளால், நுண்ணறிவு நகர்பேசிகளால் புரிந்து கொள்ளக் கூடிய குறிகள் ஆகும். இக்குறியீடு வெள்ளை நிறப்புலத்தில் கருப்பு வடிவங்களைக் கொண்டது. இங்கு குறியீட்டாக்கம் கொண்டுள்ளவை எண்கள் அல்லது எழுத்துகளாக இருக்கலாம். இதனை வருடி, வாசித்து மேலதிக தகவல்களை, அல்லது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஒரு இணையத்தளத்தின் முகவரியையும் இம்முறையில் அடக்கலாம்.


ஆரம்பகாலத்தில் வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட இந்தக் குறியானது தற்போது பரவலாக வேறு தேவைகளுக்கும் பயன்படுகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நபரது தொடர்பு விபரத்தை இம்முறைமூலம் நகர்பேசியில் உள்ளடக்கி வைத்திருந்து தேவைப்படும் பட்சத்தில் வேறொருவருடன் பரிமாறிக்கொள்ளலாம் அல்லது இணையதள முகவரிகள், குறுந்தகவல், மின்னஞ்சல் போன்றவற்றையும் இம்முறைமூலம் உள்ளடக்கலாம். ஒருவர் தனது தொடர்பு விபரங்களை இந்த QR குறியைப் பயன்படுத்தி உருவாக்கி, பின்னர் அச்சிட்டு ஆளறி அட்டையாக (visiting card) உபயோகப்படுத்தலாம்.


இலவசமான குறியீட்டாக்கம் அல்லது குறிநீக்கம் செய்யும் இணையதளங்கள், சில புகைப்படக் கருவிகள் கொண்ட நகர்பேசிகள் இவற்றை உருவாக்கவும் குறிநீக்கம்செய்யவும் வசதிகள் உடையன, கூகிளின் ஆண்ட்ராய்டு நகர்பேசிகளில் இயல்பாகவே காணப்படும் பட்டைக் குறியீடு வாசிப்பி மூலம் கியூ.ஆர் குறியைப் பயன்படுத்தலாம்.