பொறியியல் மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி பாடத்தினை கற்க வேண்டும் என்பதால் இந்தாண்டு முதல் தமிழ் மரபு, தமிழர் பண்பாடு என்ற இரு பாடத்தினை கற்க அரசானை போடப்பட்டுள்ளதாகவும் திராவிட மாடல் ஆட்சிக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் அதனை தமிழக முதலமைச்சர் எதிர்த்து நிற்பார் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள சட்டக்கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளான பன்ருட்டி, திண்டிவனம்,ஆரணி,விழுப்புரம், காஞ்சிபுரத்தை சார்ந்த 2017- 21 ஆம் ஆண்டில் கல்வி பயின்ற 1114 கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உயர்கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் மோகன் பங்கேற்றனர்.  பட்டமளிப்பு விழா மேடையில் பேசிய  உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, படித்தால் மட்டும் போதாது படிக்கும் போதே தனி திறமையை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் எந்த துறையில் பயின்றாலும் அந்த துறையில் நான் முதல்வனாக வர வேண்டும் என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதற்காக தான் நான் முதல்வன் திட்டம் நடைமுறை படுத்தபட்டுள்ளதாக தெரிவித்தார்.


மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010 ஆம் ஆண்டு ஆட்சியில் இருக்கும் போதே பொறியியல் படிப்பான சிவில் படிப்பிற்கு தமிழ் வழியில் கொண்டுவந்தது  திமுக ஆட்சியில் தான் என்றும் ஆங்கிலமும், தமிழும் இரு மொழிக்கொள்கை முக்கியம் என கூறினார். வெளிநாடுகளுக்கு  சென்று பணி செய்ய வேண்டும் என்றால் ஆங்கிலம் முக்கியமாக உள்ளதால் ஆங்கிலத்தை கற்று கொள்ள வேண்டும் என்றும் ஆங்கிலத்தை மட்டும்  கற்று கொண்டால் போதும் என நினைக்காமல் தாய்மொழியான தமிழையும் நன்கு  அறிந்து கொள்ள வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதே தமிழை அழித்து இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.


இந்தியை புகுத்தி படிக்க சொன்னால் எப்படி முடியும்  திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆங்கிலம், தமிழ் வழி என இரு மொழி கல்வி தான் பன்னாட்டு மொழியான ஆங்கிலம் இருக்கும் போது எதற்காக இந்தியை கற்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அமைச்சர், இருமொழி கொள்கையை கொண்டு வந்து தமிழ் மொழியை உயர்த்தி இருப்பதாகவும், நாங்கள் இந்திக்கு எதிர்பானவர்கள் அல்ல இந்தியும் கட்டாய பாடம் என்றால் அதனை ஏற்க மாட்டோம் கற்று கொள்ள விருப்ப படுபவர்கள் இந்தியை கற்று கொள்ளலாம் என கூறினார். புதிய கல்வி கொள்கையில் 3 ஆம் வகுப்பு, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பில் பொதுதேர்வு என்றால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஆரம்பத்திலையே வடிக்கட்டினால் நிறைய பேர் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தான் புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாகவும், பொறியியல் பயில்பவர்கள் கண்டிப்பாக தமிழ் மொழி பாடத்தினை படிக்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டில் இருந்து முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் முதல் பருவம் இரண்டாம் பருவத்தில் கட்டாயம் தமிழை படிக்க வேண்டும் என்பதால் தமிழ் மரபு, தமிழர் பண்பாடு என்ற இரு பாடம்  கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் ஆக வேண்டும் என்று மாணவர்கள் என்ன வேண்டும் ஐ பி எஸ் ஆன பிறகு கண்ட மேனிக்கு பேசிட்டு இருக்க கூடாது என்றும் எலோரும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகி இருக்கிற நீங்கள் தமிழக  சிந்தனையோடு தமிழ நாட்டின் வளரலாற்றை புரிந்து கொள்ளபவர்களாக வாழ வேண்டும், அது தான் பொறியிலாளர் பட்டத்தாரின் பட்டத்தை பெற்றிருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதுக்கு தான் ஐ ஏ எஸ் கோச்சிங் காலேஜ் உள்ளதாக கூறினார். மத்திய அரசு புதிய கல்வி கொள்கையிலுள்ள குறைபாடுகளை முழுமையாக நீக்கப்படவில்லை தேசிய கல்வி கொள்கை என்பது இந்தியை திணிப்பதற்காக கொண்டு வருவதாகவும் தேசிய கல்வி கொள்கை என்பது தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் நாட்டுக்கும் தடையாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தற்போதைய அரசியல் தெரியவில்லை என்றும் ஆட்டுக்கு தாடி போல வேற்றுமையில் ஒற்றுமையுடைய நாடாகவும் மதர்ச்சார்பற்ற நாடாக இந்தியா உள்ளது.


கவர்னர் அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேசுவதாகவும் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்ட அடிப்படை உரிமையான மதச்சார்பற்ற நாடு என்பதற்கு பதிலாக பல்வேறு நாடுகள் மதத்தின் அடிப்படையில் இருப்பதால் இந்தியாவும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆளுநர் பேசுவது என்பது என்ன பொருள். அதற்காக தான் ஆளுநரை மாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் தோழமை கட்சிகள் இணைந்து தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென கையெழுத்து வாங்குவதாக தெரிவித்தார். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை தூண்டி விட்டு பாஜக சிந்தனைகளை தூண்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அது தான் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நடைபெற்றது. அதை தான் மேற்கு வங்க முதல்வர் தமிழகம் வரும் போது சொல்லிவிட்டு போனதாகவும்


எதிர்கட்சி ஆளும் அரசிற்கு யாரெல்லாம் எதிர்ப்பாக உள்ளார்களோ அவர்களுக்கெல்லாம் ஒன்றிய அரசால் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அதனால் தான் தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கு எதிர்ப்பாக செயல்படுவதாக கூறினார்.  அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசும் ஆளுநர் தமிழிசையின் செயல் கண்டனத்துக்குறியதாக என்றும் நிதி நிலைக்கு ஏற்ப கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுவது முடிவு செய்யப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் அதிகாரத்திற்காக எதையும் செய்ய தவியாய் தவித்து கொண்டிருப்பவர் அல்ல என்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் அதை அவர் எதிர்த்து நிற்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.