விழுப்புரம்: அரசியலாக்க வேண்டும் என்று பாஜகவினர் தன்மீது சேற்றை வாரி அடித்ததாகவும் இரண்டாயிரம் கொடுக்க வேண்டியதை ஆராயிரம் கொடுங்கள் என அண்ணாமலை தெரிவிப்பதை ஒன்றிய அரசிடம் அவரே கேட்டு கொடுக்க சொன்னால் நன்றாக இருக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் 30.11.2024, 01.12.2024 ஆகிய இரண்டு நாட்களில் பெய்த கனமழை அளவு கிட்டத்தட்ட 55 சதவீதம் பெய்துள்ளது. அதில் விழுப்புரம் நகரத்தில் மட்டும் 63.5 சதவீதம் மட்டும் மழை பொழிந்திருக்கிறது. மற்ற பகுதிகளெல்லாம் 50 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை மழை பொழிந்திருப்பதை நீங்கள் அறிந்தவையாகும். விழுப்புரம் மாவட்டத்தில் இது மாதிரி வரலாறு காணாத ஒரு மிகப்பெரிய புயல் வெள்ளம் இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தை தாக்கியிருக்கிறது.
தமிழக முதலமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்ததின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் துணை முதலமைசசர் விழுப்புரம் மாவட்டத்தில் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தாக கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் எல்லா இடத்திலும் முதலமைச்சர் ஓய்வின்றி ஆய்வு செய்ததாகவும் மாவட்டத்தில் மொத்தமாக விக்கிரவாண்டியில் 6 பேர் திருவெண்னைய்நல்லூர் 2 விழுப்புரத்தில் 5 பேர் வானூர் 1 என 14 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழையினால் நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டில் உள்ள 26 சாலைகள் சேதமடைந்ததில் 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், விளைநிலங்கள் 80 ஆயிரத்து 520 ஹெக்டெர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஹெக்டேருக்கு 22500 ரூபாய் மானவாரி பயிருக்கு 8500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
பசுமாடுகள் கன்றுகள் 94, ஆடுகள் 352 உயிழந்துள்ளதாகவும் அரகண்டநல்லூர் பகுதி அதிகமாக பாதிப்படைந்துள்ளதாக கூறினார். சாலைகள் துண்டிக்கப்பட்டது சீர் செய்யும் பணிகள் நிறைபெற்று சாலைகள் சரி செய்யபட்டுள்ளதாகவும், 67 நிவாரண முகாம்கள் அமைத்து 4906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாதிக்கபட்டவர்களுக்கு 16,616 உணவு பொட்டலங்கள் அரசு சார்பில் வழங்கியுள்கதாகவும்,
முதலமைச்சர் அவர்கள் அறிவித்த அறிவிப்பின்படி ஹெக்டேர் ஒன்றிற்கு நெற்பயிர் உள்ளிட்ட பாசன பயிர்களுக்கு ரூ.17,000-மும், பல்லாண்டு பயிர்களுக்கு ரூ.22500-மும், மானாவரி பயிர்களுக்கு ரூ.8500-மும் நிவாரணத்தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதேபோல் கால்நடை உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதால் 37 பசுக்கள் மற்றும் 57 கன்றுகளுக்கு தலா ரூ.37,500-மும், 352 ஆடுகளுக்கு தலா ரூ.4000-மும், 82300 கோழிகளுக்கு தலா ரூ.300-ம் வழங்கப்படவுள்ளது.
கனமழையின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளிலும், வீடுகளை இழந்தவர்களுக்கு கூரை மற்றும் ஓட்டு வீடு பகுதியாக சேதமடைந்திருந்தால் ரூ.8000 நிவாரணமும், முழுமையாக சேதமடைந்திருந்தால் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடுகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள் சேதமடைந்துள்ளதால், அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்
விழுப்புரம் இருவேல்பட்டில் என் மீது சேற்றை அடித்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். வேண்டும் என்றே அரசியல் செய்யப் பேசுகிறார்கள். என் மீது மட்டுமின்றி ஆட்சியர் பழனி மீதும், கவுதம சிகாமணி எம்.பி. மீதும் சேறு லேசாக பட்டது. எங்கள் நோக்கம் மீட்பு மற்றும் நிவாரணம்தான். இதை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை. இரண்டாயிரம் கொடுக்க வேண்டியதை ஆராயிரம் கொடுங்கள் என அண்ணாமலை தெரிவிக்கிறார். அதனை ஒன்றிய அரசிடம் அவரே கேட்டு கொடுக்க சொன்னால் நன்றாக இருக்கும் என பொன்முடி தெரிவித்தார்.